இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில், கல்லூரி மாணவ-மாணவியருக்கான மாநிலந்தழுவிய அளவில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கல்வியோடு ஒழுக்கம் சேர்ந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பதில் உறுதி பூண்டுள்ள அமைப்பு முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப். - தமிழ்நாடு).
கட்டுரைப் போட்டி:
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை எம்.எஸ்.எஃப். நடத்துகிறது.
தலைப்பு:
(1) நபிகள் நாயகம்: மனித குலத்தின் மகத்தான தலைவர்
(2) நபிகள் நாயகம்: நற்பண்புகளின் தாயகம்
(3) நபிகள் நாயகம்: அகிலத்திற்கோர் அருட்கொடை
ஆகிய மூன்று தலைப்புகளில் ஒன்றின்கீழ், கல்லூரி மாணவ-மாணவியரிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.
விதிமுறைகள்:
ஒரு கட்டுரை ஃபுல் ஸ்கேப் (ஏ4) தாளில் பதினாறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கட்டுரை ஒவ்வொன்றும் கட்டுரையாளர் பயிலும் கல்லூரியின் முதல்வர் / துறைத்தலைவரின் சான்றிதழுடன் அனுப்பப்பட வேண்டும்.
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.02.2012.
பரிசுகள் விபரம்:
சிறந்த கட்டுரைகள் நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் தரத்திற்கேற்ப முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதுல் பரீசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதற்பரிசு: ரூ.5,000/-
இரண்டாம் பரிசு: ரூ.4,000/-
மூன்றாம் பரிசு: ரூ.3,000/-
ஆறுதல் பரிசு: ரூ.2,000/-
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
காயிதெமில்லத் மன்ஸில்,
36, மரைக்காயர் லெப்பைத் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001.
கல்லூரி முதல்வர்களுக்கு வேண்டுகோள்:
கல்லூரி முதல்வர்கள் இதற்கு ஒத்துழைக்கவும், கல்லூரி தகவல் பலகையில் இதனை வெளியிட்டு உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புள்ள,
ஏ.செய்யது பட்டாணி,
மாநில செயலாளர்,
முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்.),
தமிழ்நாடு.
தொடர்புக்கு:
செய்யது பட்டாணி - +91 96299 32801
ஷாநவாஸ் - +91 95000 34786
அமீன் - +91 97916 61906
அன்சாரி - +91 90032 40905
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |