இந்தியாவில் ரயில்வே டிக்கெட்கள் முன்பதிவு - தற்போது பயண தேதியிலிருந்து 90 நாட்களுக்கு முன்னர் துவங்குகிறது. பரிசோதனை முறையில் - தற்போது முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னரே செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் பயணியர் - அங்கீகரிக்கப்பட்ட 9 அடையாள அட்டைகளில் ஒன்றினையும், காகிதத்தில் அச்சிடப்பட்ட இ-டிக்கெட்டினையும் - பயணத்தின் போது காண்பிக்கவேண்டும். காகிதத்தை மிச்சப்படுத்தும் முகமாக - இந்தியன் ரயில்வே, VRM எனப்படும் - Virtual Reservation Manager, இ-டிக்கெட் நகலினை தங்கள் மொபைல் போனிலோ, லேப்டாப்பிலோ காண்பிக்கலாம் என அறிவித்திருந்தது.
புதிதாக தற்போது - இன்டர்நெட் மூலம் பதிவு செய்தப்பின் பெறப்படும் SMS தகவலையும் - இ-டிக்கெட் / VRM க்கு பதிலாக காண்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:ரயில்வே டிக்கெட் முன்பதிவ... posted byP.S.ABDUL KADER (JEDDAH,KSA)[08 February 2012] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16651
வரும் மார்ச் 14 ,2012 அன்று மத்திய ரயில்வே பட்ஜெச்ட் தாக்கல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய மேலும் நாள்கள் கூடுதல் (150 நாட்களுக்கு முன்னர் ) முன் பதிவு பண்ணலாம் என எதிர்பார்க்கிறோம்.
2. Re:ரயில்வே டிக்கெட் முன்பதிவ... posted byM.Parthipan (tuticorin)[08 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16655
இது நல்ல செய்திதான் இருந்தாலும் 120நாட்களுக்கு முன்பு யாரும் இங்கு செல்லவேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. இதனால் புரோக்கர்களே முன்பதிவு டிக்கெட்டுகளை ஏதாவது ஒரு பெயரில் எடுத்து வைத்துக்கொள்கின்றனர்.
ரயில்வே டிக்கெட்டுகளை எடுத்து விற்கும் புரோக்கர்கள் தொழிலில் நன்கு அனுபவம் பெற்று விட்டதால் அதற்கேற்ப முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்துவைத்துக்கொள்கின்றனர். இதற்கேற்ப டிக்கெட் கேட்பவர்களிடம் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
இதனை ரயில்வே நிர்வாகம் தடுக்கவேண்டும். புரோக்கர்களை முற்றிலுமாக ஒழித்து பயணிகள் பயன்பெறும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
4. AlhamdhAlhamdhulillah, a great relief........ posted byShameemul Islam SKS (Chennai)[08 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 16662
AlhamdhAlhamdhulillah, a great relief to the people in the big cities who otherwise have a long struggle to get the ticket to visit their hometown for seeing there loved ones.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross