ஆவின் பாலை விலையுயர்த்தி விற்ற காரணத்திற்காக விற்பனை முகவர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று முறைகேடுகள் நடைபெற்றால் பொதுமக்கள் முறையிடுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், ஆவின் பாலை - அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து வரப்பெற்ற புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களது உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், தனி வட்டாட்சியர் (குபொவ), தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) ஆகியோரைக் கொண்ட குழுவினர் 02.02.2012 மற்றும் 03.02.2012 ஆகிய நாட்களில் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் தணிக்கை மேற்கொண்டதில், ஆவின் பால் முகவர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற முகவர்களின் உரிமத்தை ரத்து செய்ய திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் ஆவின் பாலை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் முகவர்கள் பற்றிய விபரங்களை கீழ்க்காணும் அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்:-
(1) பொது மேலாளர்,
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்,
திருநெல்வேலி.
கைபேசி எண்: 94422 72004
அலுவலகம்: 0462-255004
(2) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
தூத்துக்குடி.
கைபேசி எண்: 94450 00370
அலுவலகம்: 0461-2341471
(3) தனி வட்டாட்சியர் (பறக்கும் படை),
தூத்துக்குடி.
கைபேசி எண்: 94450 45629
ஆவின் பாலை பாக்கெட்களில் அச்சிடப்பட்ட விலைக்கே வாங்கி பயனடைய பொதுமக்கள் / நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |