காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியருகில் அடங்கியிருக்கும் மஹான் பேர் மஹ்மூது மஜ்தூபு வலிய்யுல்லாஹ் அவர்களின் 308ஆம் ஆண்டு கந்தூரி நிகழ்வுகள், ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 01 முதல் 14 முடிய - 24.01.2012 முதல் 07.02.2012 வரை நடைபெற்று முடிந்துள்ளது.
25.01.2012 முதல் 06.02.2012 வரை தினமும் அதிகாலை ஸுப்ஹு தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
24.01.2012 முதல் 06.02.2012 வரை தினமும் இரவு 08.45 மணிக்கு சன்மார்க்கப் பேருரை பின்வருமாறு நடைபெற்றது:-
24.01.2012 அன்று, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, “இணையே இல்லா ஏந்தல் நபி நாயகம் (ஸல்) அவர்கள்” என்ற தலைப்பிலும்,
25.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் பாக்கவீ ஃபாழில் அஹ்ஸனீ, “பெருமானார் (ஸல்) அவர்களின் பிறப்பும், உயர்வும்” என்ற தலைப்பிலும்,
26.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, “இறுதி நபி எச்ச்ரித்த இறுதி கால குழப்பங்கள்” என்ற தலைப்பிலும்,
27.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், குத்பா பெரிய பள்ளியின் இமாமுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, “சர்தார் நபியும் சத்திய ஷஃபாஅத்தும்” என்ற தலைப்பிலும்,
28.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, “நற்பலன்களை அடைய நல்லோர்களை மதிப்போம்” என்ற தலைப்பிலும்,
29.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் பாக்கவீ ஃபாழில் அஹ்ஸனீ, “ஷுஹதாக்களின் தினம்” என்ற தலைப்பிலும்,
30.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நாமும்” என்ற தலைப்பிலும்,
31.01.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.நாகூர் மீரான் ஸிராஜீ, “வான்மறை கூறும் வரலாறுகளும், படிப்பினைகளும்” என்ற தலைப்பிலும்,
01.02.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, “ஜின்களின் அகமியங்கள்” என்ற தலைப்பிலும்,
02.02.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியரும், நஸூஹிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஃப்ஸலுல் உலமா எம்.ஏ.எஸ்.ஏ.செய்யித் மஹம்மத் மன்பஈ, “திருமறையும், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பும்” என்ற தலைப்பிலும்,
03.02.2012 அன்று, மவ்லவீ எஸ்.எம்.எச்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானீ ஸூஃபீ காஹிரில் காதிரீ, “பெருமானார் (ஸல்) அவர்களின் பேரன்பு” என்ற தலைப்பிலும்,
04.02.2012 அன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ, “நானிலம் போற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
கந்தூரி தினமான நேற்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. மாலையில் மவ்லித் மஜ்லிஸும், இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன.
இரவு 08.45 மணிக்கு, மஹான் பேர் மஹ்மூது வலிய்யுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித்திர உரையை, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ வழங்கினார்.
துஆவுடன் நிகழ்ச்சிகள் கந்தூரி நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை பொதுமக்களுக்கு நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளனைத்திலும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கந்தூரி நிகழ்ச்சிகள் அனைத்தையும், கந்தூரி கமிட்டி தலைவர் ஹாஜி ஏ.பி.சதக்கத்துல்லாஹ், துணைத்தலைவர் எம்.கே.முஹம்மத் அலீ (ஹாஜி), செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, பொருளாளர் ஹாஜி எஸ்.எச்.தைக்கா தம்பி, துணைச் செயலாளர்கள் வி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர். ஹாஜி எஸ்.எம்.இத்ரீஸ், டி.எம்.கே.முஹம்மத் ஹஸன், ஹாஜி எஸ்.எச்.ஜஹூர், ஹாஜி எம்.ஏ.குத்புத்தீன், பி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஓ.பிலால் அமீன் ஆகியோர் செய்திருந்தனர். |