காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தனது தேர்தல் அறிக்கையில் ‘பசுமை காயலை‘ உருவாக்க நகர் முழுக்க மரம் நட திட்டமிட்டு, அதற்கென நடத்தப்படும் எளிய விழாவில் கலந்துகொள்ள வருமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரை அவர் நேரில் அழைத்ததன் அடிப்படையில், விழாவில் கலந்துகொள்ள அவரும் இசைவு தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், இம்மாதம் 02ஆம் தேதி நடைபெறவிருந்த அந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியரின் வேறு நிகழ்ச்சி காரணமாக மாற்றப்பட்டு இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று மாலை 06.00 மணியளவில் காயல்பட்டினம் தைக்கா தெரு, ஸாஹிப் அப்பா தைக்கா அருகில் நடைபெறும் - பசுமைக் காயல் திட்ட துவக்க நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையேற்று, மரங்களை நடவுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு நகர மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |