தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி.யில் அரசு அனுமதி பெற்ற 5 உள்ளூர் சேனல்கள் ஒளிப்பரப்பை தொடங்கின. உரிமம் பெற்ற மற்ற உள்ளூர் சேனல்களும் கட்டணத்தை இம்மாதம் 08ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் தூத்துக்குடி மாவட்ட தனி வட்டாட்சியர் ரெ. குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இம்மாவட்டத்தில் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு அனுமதி ஆணை பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் சார்பில் ஒப்பந்தம் மற்றும் ஏலம் 29.11.2011 அன்று நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், ஆட்சியர் பரிந்துரை செய்த உள்ளூர் டி.வி. நிறுவனங்களில், தூத்துக்குடி நகர பகுதிக்கு ஜீசஸ் டி.வி., ஹோப் டி.வி., அபி மீடியா, வானவில் மீடியா, கிருஷ்ணா மீடியா, சத்யா டி.வி., ஜே.ஜே. டி.வி., எஸ்.டி.ஆர்., அஜய் டி.வி., ராம் டி.வி., அபிஸ் டி.வி., அஸ்வின் டி.வி., ஓம் டி.வி. ஆகிய 12 உள்ளூர் சேனல்களுக்கும், கோவில்பட்டியில் ஜோதி டி.வி., புகழ் டி.வி., கேஸ்பல் டி.வி. ஆகிய 3 உள்ளூர் சேனல்களுக்கும் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் டி. விவேகானந்தன் அனுமதி ஆணை பிறப்பித்துள்ளார்.
இதில், பணம் செலுத்திய உள்ளூர் சேனல்கள் சனிக்கிழமை முதல் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. தூத்துக்குடி நகரில் சத்யா டி.வி., அபி மீடியா, எஸ்.டி.ஆர். அஜய் டி.வி., கோவில்பட்டி நகரத்தில் ஜோதி டி.வி., புகழ் டி.வி. ஆகிய 5 சேனல்களும் புதிதாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியுள்ளன.
மேலும், அபிஸ் டி.வி. மற்றும் அஸ்வின் டி.வி. ஆகியவை ஏற்கெனவே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |