காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் (+91 82205 90388) உடைய சகோதரர் - புதுக்கடைத் தெருவைச் சார்ந்த எஸ்.எம்.பி.ஷாஹுல் ஹமீத், நேற்று (08.02.2012) இரவு 07.30 மணியளவில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, ஏ.ஏ.அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், திரளான பொதுமக்களும் நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர். |