காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கெதிரில், ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தையொட்டியும், பேருந்து நிலைய கோட்டைச் சுவரையொட்டியும் காணப்படும் காட்சிகள்தான் இவை.
இடிக்கப்பட்ட கட்டிடப் பொருட்களை பல இடங்களிலிருந்து வாகனங்கள் மூலம் அள்ளி வரும் தனியார், அவற்றை தமதிடங்களில் தேக்குவதை விட்டுவிட்டு, இவ்வாறு சாலையோரத்தில் கொட்டுவதாகத் தெரிவிக்கிறார் நகர காங்கிரஸ் தலைவர் ஸதக்கத்துல்லாஹ்.
இவ்வாறு சாலையோரத்தில் குவித்து வைக்கப்படும் - உடைக்கப்பட்ட இக்கட்டிடக் கழிவுகளை சாலையோரங்களில் குவித்து வைப்பதாலும், அதற்கான வானங்களை அவ்விடங்களிலேயே நிரந்தரமாக நிறுத்தி வைப்பதாலும், அவ்வழியே வரும் பேருந்திற்கு வழிவிடுவதற்காக ஓரத்தில் நிற்க வழியில்லாமல் - நடந்து வருவோரும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுவதாகத் தெரிவித்த அவர், நகராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.
|