சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியினை பொறுத்தவரை - இடைதேர்தல்களை -
கௌரவ விசயமாகவே கருதும். தேர்தலை கருத்தில் கொண்டு - பரிந்துரைக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வில் அரசாங்கம் சில மாற்றங்களை மட்டும்
செய்து - ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணத்தை அமலுக்கு கொண்டு வரலாம்.
மின்கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் மின்சார வாரியத்தின் நிதி
நிலைமை ஓரளவு குறுகிய காலத்தில் சீரடையும். ஆனால் தற்போது நிலவும் - மின்பற்றாக்குறையினை எவ்வாறு அரசு சமாளிக்கும்? இடைதேர்தலில்
மின்வெட்டும் பெரும் பிரச்சனையாக ஆக வாய்ப்புள்ளது.
தமிழகத்தினை பொறுத்தவரை - மரபு வழி (Conventional) [அனல், நீர், வாய்வு] மின்சார உற்பத்தி கொள்ளளவு, 10,237 MW. மரபு வழி அல்லாத
(Non-Conventional) [காற்று, கோஜென், பயோ மாஸ், சூரியன்] மின்சார உற்பத்தி கொள்ளளவு, 6761 MW.
A. மரபு வழி (Conventional) [அனல், நீர், வாய்வு] மின்சார உற்பத்தி திறன் விபரம்
தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சொந்த நீர்மின்சக்தி மூலம் - 2191 MW
Hydro Non-Irrigation
1. Pykara - 59 MW
2. Moyar - 36 MW
3. Pushep - 150 MW
4. Kundah 1 - 60 MW
5. Kundah 2 - 175 MW
6. Kundah 3 - 180 MW
7. Kundah 4 - 100 MW
8. Kundah 5 - 40 MW
9. Kundah 6 - 30 MW
10. Kadamparai - 400 MW
11. Aliyar - 60 MW
12. Suriliyar - 35 MW
13. Kodayar 1 - 60 MW
14. Kodayar 2 - 40 MW
15. Periyar Vaiagi I PH - 4 MW
16. Micro - 5 MW
TOTAL HYDRO NON-IRRIGATION (A)- 1434 MW
Hydro Irrigation
17. Mettur dam - 50 MW
18. Mettur tunnel - 200 MW
19. Lower Mettur - 120 MW
20. BVNI-KKTL Barriage - 30 MW
21. Periyar - 140 MW
22. Papanasam - 32 MW
23. Servalar - 20 MW
24. Sarkarpathy - 30 MW
25. Sholayar 1 - 70 MW
26. Sholayar 2 - 25 MW
27. Micro - 40 MW
TOTAL HYDRO IRRIGATION (B)- 757 MW
TOTAL HYDRO ELECTRICITY (A + B) - 2191 MW
தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சொந்த அனல்மின்சக்தி மூலம் - 2970 MW
தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சொந்த வாய்வுசக்தி மூலம் - 516 MW
மத்திய அரசாங்க திட்டங்கள் மூலம் - 2861 MW
தனியார் மின் நிலையங்கள் மூலம் - 1180 MW
1. Basin Bridge DEPP - 196 MW
2. Samalpatti DEPP - 105.66 MW
3. Pillaiperumalnallur GTPP - 330.5 MW
4. Samayanallur DEPP - 106 MW
5. Neyveli Zero Unit - 250 MW
6. Aban Power Company - 120 MW
7. Penna Electric Company - 71.6 MW
வெளி உதவிகள் மூலம் - 305 MW
1. Eastern Region Power - 125 MW
2. Kayankulam Power -180 MW
இதர மூலங்கள் (Captive Power Plants) - 214 MW
1. TCPL - 63.75 MW
2. Other CPPs - 150.9 MW
ஆக மொத்தம் மரபு வழி (Conventional) [அனல், நீர், வாய்வு] மின்சார உற்பத்தி திறன் - 10,237 MW
B. மரபு வழி அல்லாத (Non-Conventional) [காற்று, கோஜென், பயோ மாஸ், சூரியன்] மின்சார உற்பத்தி திறன்
விபரம்
காற்றாலைகள் மூலம் - 6007 MW
கோஜென் மூலம் - 610 MW
பயோ மாஸ் மூலம் - 139 MW
சூரிய ஒளி மூலம் - 5 MW
ஆக மொத்தம் மரபு வழி அல்லாத (Non-Conventional) [காற்று, கோஜென், பயோ மாஸ், சூரியன்] மின்சார உற்பத்தி திறன் - 6761 MW
தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தி திறன் (அனைத்து வழிகளிலும்) - தற்போது 16,988 MW என்றாலும் - தினசரி உற்பத்தி - பல
காரணங்களுக்காக, பாதி அளவிலேயே உள்ளது. உதாரணமாக காற்றாலைகளை பொறுத்தவரை, வெயில் காலங்களில், அதன் மூலம் மின்சார
உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
மாநிலத்தில் நீர்மின்சக்தி திறன் 2191 MW. இருப்பினும் - கடந்த சில நாட்களாக உற்பத்தி 1200 MW அளவிலேயே (உச்சக்கட்ட தேவை நேரத்தில்)
உள்ளது.
மாநிலத்தில் அனல்மின்சக்தி (மின்சார வாரியத்தின்) திறன் 2970 MW. இருப்பினும் - கடந்த சில நாட்களாக உற்பத்தி 2380 MW அளவிலேயே
(உச்சக்கட்ட தேவை நேரத்தில்) உள்ளது.
மாநிலத்தில் வாய்வுசக்தி (மின்சார வாரியத்தின்) திறன் 516 MW. இருப்பினும் - கடந்த சில நாட்களாக உற்பத்தி 250 MW அளவிலேயே (உச்சக்கட்ட
தேவை நேரத்தில்) உள்ளது.
மத்திய அரசாங்க திட்டங்கள் மூலம் கிடைக்கவேண்டிய மின்சாரம் 2861 MW. அதில் ஏறத்தாழ 2613 MW கடந்த சில நாட்களாக (உச்சக்கட்ட தேவை
நேரத்தில்) கிடைக்கிறது.
தனியார் மின் நிலையங்கள் மூலம் கிடைக்கவேண்டிய மின்சாரம் 1180 MW. அதில் ஏறத்தாழ 570 MW கடந்த சில நாட்களாக (உச்சக்கட்ட தேவை
நேரத்தில்) கிடைக்கிறது.
இதர மூலங்கள் (Captive Power Plants) மூலம் கிடைக்கவேண்டிய மின்சாரம் 214 MW. அதில் ஏறத்தாழ 85 MW கடந்த சில நாட்களாக
(உச்சக்கட்ட தேவை நேரத்தில்) கிடைக்கிறது.
காற்றாலைகள் மூலம் கிடைக்கவேண்டிய மின்சாரம் 6007 MW. அதில் ஏறத்தாழ 180 MW கடந்த சில நாட்களாக (உச்சக்கட்ட தேவை நேரத்தில்)
கிடைக்கிறது.
கோஜென் மற்றும் பயோ மாஸ் மூலம் கிடைக்கவேண்டிய - 749 MW. அதில் ஏறத்தாழ 350 MW கடந்த சில நாட்களாக (உச்சக்கட்ட தேவை
நேரத்தில்) கிடைக்கிறது.
வெளி உதவிகள் மூலம் கிடைக்கவேண்டிய - 305 MW. அதில் ஏறத்தாழ 90 MW கடந்த சில நாட்களாக (உச்சக்கட்ட தேவை நேரத்தில்)
கிடைக்கிறது.
இது தான் மாநிலத்தின் தற்போதைய நிலைமை. மின்வெட்டில் முன்னேற்றம், தற்போது உற்பத்தி திறனுக்கு குறைவாகவே உற்பத்தி செய்யும் மின்நிலையங்கள் மூலமே கிடைக்கவேண்டும். அது தவிர - தனியாரிடம் - தேவையின் அடிப்படையில், மின்வாரியம் தற்போது 200 MW - 600 MW வரை - வாங்கி வருகிறது. எதிர்வரும் நாட்களில் தனியாரிடம் வாங்கப்படும் மின்சாரமும் - அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
[தொடரும்]
|