பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் செயலாளரும், பொதுநல சேவையில் எமது அமைப்புடன் இணைந்து பணியாற்றி வந்தவருமான ஜனாப் பாளையம் இப்றாஹீம் காக்கா அவர்களின் மரணம் நமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளை வல்ல அல்லாஹ் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக அளிப்பானாக... ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினருககு எமது அன்பான ஸலாமையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |