தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்திலுள்ள 12 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. திருச்செந்தூரில் இம்மாதம் 17ஆம் தேதியன்று முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் கண் மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
இம்முகாமில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பங்கேற்று, துறை சார்ந்த திட்டங்களில் விண்ணப்பங்கள் அளித்து, மாற்றுத் திறனாளிகளில் துறை சார்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளனர்.
மேலும், தேசிய அடையாள அட்டை வழங்குவது மட்டுமின்றி உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, இலவச பயணச் சலுகை, நலவாரிய பதிவு, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கான பதிவுகள் மாற்றுத்திறானளிகள் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
இதன்படி 07.02.2012 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
10.02.2012 ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
13.02.2012 திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
15.02.2012 கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
17.02.2012 திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
20.02.2012 உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
22.02.2012 சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
24.02.2012 ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
27.02.2012 விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
29.02.2012 புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
02.03.2012 கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
06.03.2012 கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முகாம்கள் நடைபெறும்.
மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். |