காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிய ஆணையராக - தற்போது பணியில் இருக்கும் வீ.கண்ணையாவுக்கு பதிலாக - வீ.எஸ். சுப்புலட்சுமி நியமனம் ஆகவுள்ளார். தற்போது கோவில்பட்டி ஆணையர் பொறுப்பில் இருக்கும் இவர் - காயல்பட்டினம் நகர்மன்ற பொறுப்பினை விரைவில் ஏற்கவுள்ளார்.
DCE படிப்பினை முடித்துள்ள இவர் 1983 ஆம் ஆண்டு - Overseer ஆக - அரசு பணியில் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டு Junior
Engineer ஆக பதவி உயர்வு பெற்று - தற்போது Municipal Engineer ஆக உள்ளார். நாகர்கோயில், செங்கோட்டை, தஞ்சாவூர், கோவில்பட்டி உட்பட பல ஊர்களில் பணிப்புரிந்துள்ள இவருக்கு 49 வயதாகிறது. இவருக்கு ஒரு மகனும் உண்டு.
2010 ஆம் ஆண்டு - Engineer பொறுப்பிலும் காயல்பட்டினத்தில் சில மாதங்கள் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முழு நேர ஆணையராக இல்லாமல் - திருநெல்வேலியில் உள்ள RDMA அலுவலக பணியில் இருந்துக்கொண்டே, காயல்பட்டினம் ஆணையர் பொறுப்பினையும் வகிப்பார்.
[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 11:06pm/2.2.2012]
|