தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியலமைப்பான மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு மாநில நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
28.01.2012 அன்று காலையில், சென்னை - தாம்பரம் அருகேயுள்ள மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியில் தமுமுக – மமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கூட்ட அறிமுகவுரையாற்றினார். தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலீ சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநில நிர்வாகிகள் தேர்தலில், தமுமுக மற்றும் மமகவின் மாநில தலைவராக மவ்லவீ ஜே.எஸ்.ரிஃபாஈ ரஷாதீ போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமுமுக மாநில பொதுச்செயலாளராக பி.அப்துஸ்ஸமத், தமுமுக - மமக மாநில பொருளாளராக ஓ.யு.ரஹ்மத்துல்லாஹ், மமக மாநில பொதுச்செயலாளராக எம்.தமீமுன் அன்ஸாரீ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நன்றி:
www.tmmk.in
தகவல்:
தமீமுல் அன்ஸாரீ,
துணைத்தலைவர்,
தமுமுக - காயல்பட்டினம் கிளை. |