நிலுவையிலுள்ள தொடர்வண்டி நிலையப் பணிகளை நிறைவேற்றி முடிக்காவிடில் மார்ச் மாதத்தில் ஆர்ப்பாட்டம்! நகர முஸ்லிம் லீக் அறிவிப்பு!!
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய - நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றி முடிக்காவிடில், அனைத்து பொதுமக்களையும் திரட்டி மார்ச் மாதத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழு ஊழியர் கூட்டம் 30.01.2012 திங்கட்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் 44/123, தீவுத்தெரு என்ற முகவரியிலுள்ள - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் இல்லத்தில், நகரத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா இறைமறை வசனத்துடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து,
வார்டு வாரியாக செயலாளர்களை நியமித்து, உறுப்பினர்களை சேர்த்தல்...
கட்சியின் நகர கிளைக்கு சொந்தமாக அலுவலகம் வாங்கல்...
காயல்பட்டினத்திற்கு அப்துஸ்ஸமது ஸமதானீ அவர்களை வரவழைத்து பொதுக்கூட்டம் நடத்தல்...
உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், உள்ளூர் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் உறுப்பினர்கள் விவாதித்தனர். பின்னர், இக்கூட்டத்தில் முன்னிலை வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
ஓர் இயக்கத்தின் வெற்றி - மக்கள் பிரச்சினைகளில் அது எந்தளவுக்கு முன்னிற்கிறது என்பதைப் பொருத்தே அமைகிறது என்றும், எனவே காயல்பட்டினத்தில் மக்கள் சந்திக்கும் பொதுப்பிரச்சினைகளில் முன்னின்று பணியாற்றி தீர்வு கிடைக்க நகர முஸ்லிம் லீக் பாடுபட வேண்டும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
நிறைவாக, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இரங்கல் தீர்மானம்:
நகர முஸ்லிம் லீக் முன்னாள் பொருளாளர் ஹாஜி எம்.டி.எஸ்.அன்ஸாரீ அவர்களின் மனைவியும், கட்சியின் மாவட்ட பிரதிநிதி எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் தாயாருமான - அண்மையில் காலமான ஹாஜ்ஜா பி.எஸ்.நஃபீஸா உம்மா,
நகர முஸ்லிம் லீக் மாணவரணி உறுப்பினர் ஷேக் முஹம்மத் அவர்களின் தந்தை - அண்மையில் காலமான டி.ஏ.அப்துர்ரஸ்ஸாக்
ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து, அவர்களின் பிழை பொறுப்பிற்காக துஆ செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - வார்டு செயலாளர்கள் தேர்வு:
நகரிலுள்ள அனைத்து வார்டுகளுக்கும் பின்வருமாறு கட்சியின் முன்னோடிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:-
வார்டு 01:
(1) முஹம்மத் இஸ்மாஈல் (த.பெ. காயல் ஹம்சா)
(2) ஜுவெல் ஜங்ஷன் மீரான்
வார்டு 02:
(1) ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ்
(2) ஹாஜி எம்.ஏ.ஹஸன்
(3) ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர்
(4) ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ்
வார்டு 03:
(1) ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ
(2) ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண்டு சாஹிப்
(3) பி.என்.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன்
(4) கே.எம்.டி.சுலைமான்
(5) ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் (மாணவரணி)
(6) கிதுரு ஃபாத்திமா (மகளிரணி)
வார்டு 04:
(1) எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்
(2) கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
(3) கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா (நகர்மன்ற உறுப்பினர்)
வார்டு 05:
(1) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(2) ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்
(3) ஹாஜி எம்.இசட்.சித்தீக்
(4) அரபி எம்.எம்.ஷாஹுல் ஹமீத்
(5) எல்.எஸ்.எம்.மிஸ்ரிய்யா
வார்டு 06:
(1) ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.இப்றாஹீம் அத்ஹம்
(2) ஏ.கே.மஹ்மூத் சுலைமான்
(3) எஸ்.கே.ஸாலிஹ்
(4) பி.எம்.ஏ.சி.ஷேக் நூருத்தீன்
(5) என்.எம்.இஜாஸா அஹ்மத் (மாணவரணி)
(6) எஸ்.எச்.ஷேக் நவ்ஃபல்
(6) இசட்.எம்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (மகளிரணி)
வார்டு 07:
(1) எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன்
(2) ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ
(3) எச்.எல்.அப்துல் பாஸித்
(4) காஜா மிஹ்ஸாத் பக்ரீ (மாணவரணி)
(5) உம்மு ஹபீபா (மகளிரணி)
வார்டு 08:
(1) ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்
(2) எம்.ஏ.சி.சுஹைல் (மாணவரணி)
(3) எஸ்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் முபாரக் (மாணவரணி)
வார்டு 09:
(1) பெத்தப்பா சுல்தான்
(2) எம்.புகாரீ
(3) டி.ஏ.நூஹ் நஜீயுல்லாஹ் (மாணவரணி)
வார்டு 10:
(1) ஹாஜி வாவு எஸ்.ஷாஹுல் ஹமீத்
(2) ஹாஜி எம்.அஹ்மத்
(3) ஹாஜி எம்.என்.காஜா முஹ்யித்தீன்
(4) ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(5) எம்.எச்.அப்துல் வாஹித்
(6) வாவு எம்.ஏ.எஸ்.ஜீனத் (மகளிரணி)
வார்டு 11:
(1) ஹாஜி எஸ்.டி.கமால்
(2) கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா
(3) ஷாஜஹான்
(4) எஸ்.எச்.நியாஸ் (மாணவரணி)
வார்டு 13:
(1) ஏ.எல்.எஸ்அபூ ஸாலிஹ்
(2) ஷெய்கு ஹுஸைன்
(3) எம்.ஏ.முஹம்மத் ஜவஹர் (மாணவரணி)
வார்டு 15:
(1) ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன்
(2) ஆசிரியர் அப்துல் ரசாக்
(3) எஸ்.தஸ்தகீர்
வார்டு 16:
(1) தஸ்தகீர்
(2) எம்.என்.ஸாலிஹ்
(3) அபுல்ஹஸன் ஷாதுலீ
வார்டு 17:
(1) ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்
(2) ஏ.எச்.எம்.முக்தார்
(3) எம்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி
(4) ஜே.உமர்
வார்டு 18:
(1) ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ
(2) ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி
(3) அடாப் லத்தீஃப் ஹாஜி
(4) ஹாஜி ஆர்.டி.ரஹ்மத்துல்லாஹ்
நகர வார்டுகளின் மேற்கண்ட பொறுப்பாளர்கள் அவரவர் வார்டுகளில் அதிகளவில் உறுப்பினர்களைச் சேர்த்து ஆலோசனை நடத்தவும், ஒரு வார்டு செயலாளர், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, சுதந்திர தொழிலாளர் அணி ஆகிய அணிகளின் பொறுப்பாளர்களை பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்வு செய்யவும் பணிக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளைக் கண்காணித்து, வார்டு பொறுப்பாளர்களை அவ்வப்போது தொடர்புகொண்டு செயலாற்றிட, நகர தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
தீர்மானம் 3 - நகர நிர்வாகிகள் தேர்தல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேதியன்று காலையில், காயல்பட்டினம் துளிர் கேளரங்கில், நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதென்றும், அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக நடைபெற்று வரும் மாணவர் பேரவை, இளைஞர் லீக் ஆகியவற்றின் தூத்துக்குடி மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் தேர்வுக் கூட்டத்தையும் மாநில பொதுச் செயலாளர் முன்னிலையில் நடத்தவும், அன்று மாலையிலேயே அனைத்து வார்டுகளிலும் பிறைக்கொடி ஏற்றவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - சொந்த அலுவலகம் வாங்கல்:
நகர முஸ்லிம் லீகிற்கு சொந்தமாக சதுக்கைத் தெருவில் கட்டிடம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதை கட்சியின் நகர அலுவலகமாகப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இப்பணியை மேற்கொள்வதற்கான பொறுப்பாளர்களாக, ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், எம்.எச்.அப்துல் வாஹித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தீர்மானம் 5 - அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்:
வரும் மே மாதம் 23அம் தேதியன்று, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அப்துஸ்ஸமது ஸமதானீ ஆகியோரை நகருக்கு வரவழைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்ற ஏற்பாடுகள் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - ஐ.ஓ.பி. வங்கியில் பெண்களுக்கான தனிச்சேவை:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் நகர கிளையில், பெண்கள் பகுதியில் தேவையான அலுவலர்கள் இல்லாத காரணத்தால், கோஷா முறையைப் பேணும் முஸ்லிம் பெண்கள் ஆண்கள் பகுதிக்கு வந்து சிரமப்படும் சூழ்நிலை உள்ளது.
இக்குறையை விரைந்து போக்கி, பெண்கள் வழமை போல அவர்களது தனிப்பகுதியிலிருந்தவாறே வங்கியின் அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ள ஆவன செய்திடுமாறு அந்த வங்கியின் மேலாளரைக் கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - கடவுச்சீட்டு குறித்த விசாரணை:
இந்தியாவில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நிர்வாகப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதிய கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்த ஆண்களும் - பெண்களும் அண்மைக் காலமாக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு நேரடியாக அழைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கோஷா முறையைப் பேணும் எம் நகரின் முஸ்லிம் பெண்களுக்கு இந்நடைமுறை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போக்கும் வகையில் காயல்பட்டினத்திலேயே அவர்கள் விசாரிக்கப்பட ஆவன செய்யுமாறு மத்திய வெளி விவகாரத்துறை அமைச்சகம், கடவுச்சீட்டு வினியோக அலுவலகம் ஆகியவற்றை முறைப்படி கோருவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 - நிலுவையிலுள்ள தொடர்வண்டி நிலையப் பணிகள்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் இடைநின்றுபோயுள்ளது. நிறைவேற்றப்பட வேண்டிய எஞ்சிய பணிகள் குறித்த நிலவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுப் பெறவும், அப்பணிகள் விரைந்து நிறைவேற்றி முடிக்கப்படாவிடில், நகர பொதுமக்கள் அனைவரையும் திரட்டி, மார்ச் மாதத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 9 - தொடர்வண்டி முன்பதிவுக்கு கூடுதல் நேரம்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தை அதிகரித்து, கூடுதல் நேரம் ஒதுக்கித் தர கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், நகர முஸ்லிம் லீக் மாணவரணி (எம்.எஸ்.எஃப்.)க்கு தனியாக விண்ணப்பப்படிவம் அதன் அமைப்பாளர் சுஹைல் மற்றும் உறுப்பினர்களிடம், மாநில பொதுச்செயலாளரால் கையளிக்கப்பட்டது.
நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணி - மாணவரணியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|