இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டம், இன்றிரவு 07.30 மணிக்கு, காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் இல்லத்தில் நடைபெறுகிறது.
மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலையில் நடைபெறும் இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில்,
வார்டு வாரியாக செயலாளர்களை நியமித்து, உறுப்பினர்களை சேர்த்தல்,
பிரதான வீதியில் கட்சியின் நகர கிளைக்கு அலுவலகம் வாங்குவது தொடர்பாக,
காயல்பட்டினத்திற்கு அப்துஸ்ஸமது ஸமதானீ அவர்களை வரவழைத்தல்
உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இக்கூட்டம் குறித்து நகர உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |