முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனை விமர்சித்து, “சாத்தானின் கவிதைகள்” என்ற தலைப்பில் தான் எழுதிய நூலுக்காக மூலம் உலக முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்தவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, உத்தர பிரதேசம் தாருல் உலூம் தேவ்பந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
அதனையடுத்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்தமையால் ஜெய்ப்பூருக்கு தான் வரவில்லையென சல்மான் ருஷ்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி, “புதிய தலைமுறை” தனியார் தொலைக்காட்சியில் 22.01.2012 அன்று இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினத்தைச் சார்ந்தவருமான என்.ஏ.தைமிய்யா, உயிர்மெய் பதிப்பகத்தைச் சார்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை, காயல்.டிவி வலைதளத்தில், “புதிய தலைமுறை” அலைவரிசை இணைப்பில் காணலாம். |