கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் துவக்கப்பட்ட - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC), அண்மையில் துவக்கப்பட்ட அபூதபீ காயல் நல மன்றம் ஆகியவற்றை வாழ்த்தி, கத்தர் காயல் நல மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் வாசகங்கள் பின்வருமாறு:-
காலத்திற்கேற்ப - அவசியம் தேவைப்படும் அம்சங்களை சேவைக் குறிக்கோள்களாக உள்ளடக்கி கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் துவக்கப்பட்ட - காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம்,
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ மற்றும் சுற்றுப்புற மண்டலங்களில் வசிக்கும் காயலர்களை மட்டும் ஒருங்கிணைத்து சில தினங்களுக்கு முன் துவக்கப்பட்ட அபூதபீ காயல் நல மன்றம் ஆகியவற்றுக்கு எமது கத்தர் காயல் நல மன்றம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
நகர்நலன் கருதி தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் கருணையுள்ள அல்லாஹ் வெற்றியாக்கித் தந்தருள்வானாக என்று பிரார்த்திப்பதோடு, தேவைப்படுவனவற்றில் எம்மாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் எம் மன்றம் தர ஆயத்தமாக உள்ளது என்ற செய்தியையும் மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மத் யூனுஸ்,
துணைத்தலைவர்,
கத்தர் காயல் நல மன்றம். |