இம்மாதம் 29ஆம் தேதி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதென்றும், அண்மையில் மூன் டிவி நடத்திய - மறை குர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் முதற்பரிசை வென்ற மாணவர் ஹாஃபிழ் முஃபீஸுர்ரஹ்மானை நேரில் அழைத்து கவுரவிப்பதென்றும், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
மலபார் காயல் நல மன்றத்தின் 33ஆவது செயற்குழுக் கூட்டம் 08.01.2012 அன்று காலை 11.00 மணிக்கு, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் அவர்களின் தலைமையில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
அக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் அவர்கள், முதலில் மருத்துவ உதவி கோரி நமதூர் காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் கூட்டத்திலுள்ள உறுப்பினர்களுக்கு விரிவாக வாசித்துக் காட்டினார்.
கோழிக்கோட்டிலும், அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் காயலர்களை நேரில் சந்தித்து, பொதுக்குழுக் கூட்டங்களில் பங்குபெறவும், மன்றத்தின் உறுப்பினராக இணையக் கோருவதென்றும் கடந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, அதற்காக நியமிக்கப்பட்ட இரு குழுக்களிடமும் விரிவாக கேட்டு விளங்கிக் கொண்டார். மேலும் இப்பணியை சிறப்பாக செய்த இரு குழுக்களுக்கும் நன்றியையும், பாராட்டையும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
செயலர் வாழ்த்துரை:
அடுத்து, செயலர் ஜனாப் ஹைதுரூஸ் ஆதில் உரையாற்றினர் 29.12.2011 அன்று மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக முன்னாள் மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்தச் செய்தியை இனையதளதில் பார்த்தவுடன் மாணவனின் தந்தை மர்ஹூம் ஜனாப் S.N.காஜா சுலைமான் அவர்களை நினைத்து கண்கலங்கியதாக செயலர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மாணவனின் தந்தை மர்ஹூம் ஜனாப் S.N.காஜா சுலைமான் அவர்கள் முன்னாள் கோழிக்கோடுவாழ் காயலர் என்று கூறிய செயலாளர், அவரும் - இம்மாணவரின் சிறிய தந்தையான நம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.N.ரஹ்மத்துல்லாஹ்வும் இரட்டை சகோதரர்கள் என்றும் கூறினார். நாம் அனைவரும் இந்த மாணவனின் குடும்பத்தார் அனைவர் ஹக்கிலும் துஆ செய்யவேண்டுமென அவர் கூட்டத்தைக் கேட்டுகொண்டார்.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றம்:
மருத்துவ உதவி கோரி நமதூர் காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனுக்கள், புகைப் பழக்கத்தை கைவிடுவது, அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துவது ஆகிய அம்சங்கள் குறித்து உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன:-
தீர்மானம் 1 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்வரும் 29-01-2012 அன்று மாலை ஐந்து மணிக்கு சகோதரர் நெய்னா காக்கா இல்லத்தின் வைத்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - சாதனை மாணவரை கவுரவித்தல்:
29.12.2011 அன்று மூன் டிவி சார்பில் கீழக்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் முதற்பரிசை வென்ற, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக முன்னாள் மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மானை வரவிருக்கும் பொதுக்குழுவில் நேரில் அழைத்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - மருத்துவ உதவி:
மன்ற உறுப்பினர் ஒருவரின் மருத்துவ செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.10,000 மருத்துவ உதவியாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - பொது நலன்:
புகைப்பழக்கத்தை கைவிடுவது, அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துவது போன்ற காரியங்களுக்கு செயல்திட்டம் தீட்ட 6 நபர் கொண்ட குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
காலை 11.00 மணிக்குத் துவங்கிய கூட்டம் மதியம் 02.30 மணியளவில் அனைவரின் துஆவுடன் நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
குறிப்பு: பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உறுப்பினர்கள் அனைவரும் 29.01.2012 அன்று மாலை 05.00 மணிக்கு முன்பாக கூட்டம் நிகழ்விடத்திற்கு வருகை தருமாறு மன்ற நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யது ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
[செய்தி திருத்தப்பட்டது - 11-1-2012 @ 3pm] |