Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:27:34 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7832
#KOTW7832
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 9, 2012
கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்பு கட்டுமானத்திற்கு DCZMA ஒப்புதல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3192 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை), இயற்கைப் பேரிடரைச் சந்திக்க வாய்ப்புள்ள மக்களுக்கு மாற்றிடத்தில் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கும் VRCC திட்டத்தின் கீழ் 169 தொகுப்பு வீடுகள் கட்ட ஒப்புதலளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளும் துவங்கின.



இந்நிலையில், தொகுப்பு வீடுகள் கட்டப்படும் காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தைச் சார்ந்த அப்பகுதி, CRZ எல்லை வரையறைக்குள் வருவதாகவும், எனவே அப்பகுதியில் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறும் கோரி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் சார்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொகுப்பு வீடுகள் கட்டப்படும் அவ்விடம் CRZ எல்லை வரையறைக்குள் வருகிறதா என்பதை District Coastal Zone Management Authority (DCZMA) உடன் இணைந்து அளந்து பார்த்து, 2011 மார்ச் 04ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தங்கவேல் ராஜேஷ் கமிஷனுக்கு உத்தரவிட்டதோடு, அதுவரை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடையும் விதித்தது.

அதன் தொடர்ச்சியாக, 16.06.2011 அன்று மதியம் 02.30 மணிக்கு குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெறுமிடத்தை கடல் மட்டத்திலிருந்து அளந்தறியும் பொருட்டு கமிஷனர் தங்கவேல் ராஜேஷ், வழக்குறைஞர்கள் சுவாமி அய்யா, அரசு வழக்குறைஞர் சாமுவேல் ராஜேந்திரன் ஆகியோர் கட்டுமானப் பகுதிக்கு வந்து அளந்து பார்த்தனர்.

கடல் மட்டத்திலிருந்து (High Tide Line) 200 மீட்டருக்கும் மேல் இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்க, இந்த அளவீட்டின் படி இக்குடியிருப்புக்கும், கடல் மட்டத்திற்கும் இடையில் 140 மீட்டர் மட்டுமே இடைவெளி இருந்ததாகத் தெரிகிறது.

அதனை தொடர்ந்து - இது குறித்த அறிக்கை - நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கவேண்டும். இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தை காயல்பட்டணம்.காம் இணையதளம் - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் - வினவியிருந்தது. இது குறித்து பதில் அளித்த சிறப்பு தாசில்தார் பீ.கருப்பசாமி - இது வரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் - இது குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் (திருநெல்வேலி கிளை) வினவப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள தலைமை பொறியாளர் எட்வின்சம் - இத்திட்டம் குறித்த ஒப்புதல், District Coastal Zone Management Authority (DCZMA) மூலம் பெறப்பட்டு விட்டதாகவும் - தற்போது State Coastal Zone Management Authority (SCZMA) ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அதுவே நிச்சயம் நடக்கும்!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [09 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15760

kayalpatnam.com இந்த விஷயத்திற்காக நிறைய தகவல்கள் சேகரிக்க பாடுபடுகிறது. அல்ஹம்துலில்லாஹ். நிச்சயம் அல்லாஹு அதற்க்கான பிரதிபலத்தை தருவான்.

உங்களின் இந்த தகவலை பார்த்தால் எங்கோ என்னமோ தவறு நடக்கிறது போல தெரிகிறது.

நாம என்னதான் நாடினாலும் அல்லாஹுவின் நாட்டம் எதுவோ அதுவே நிச்சயம் நடக்கும் என்பதில் நமக்குள் மாற்று கருத்து இல்லை. அப்படி நடக்க கூடியவை எதுவாக இருந்தாலும் எங்கள் ஊருக்கோ எங்கள் மக்களுக்கோ தீங்கு விளைவிக்க கூடியதாக ஆக்கி விடாதே அல்லாஹ். என்பதே நம்முடைய பிரார்த்தனையாக இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கற்புடையார் வட்டம் (சிங்க...
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [09 January 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 15766

முறைகேடான திட்டங்களுக்கு அதிகாரிகள் எவ்வளவு வேகமாக அனுமதி கொடுக்கின்றனர். எங்கேயோ இடிக்கின்றது. இருக்க வேண்டிய 2௦௦ மீட்டர் தூரத்தைவிட குறைவாக இருந்தும் அதாவது 140 மீட்டர் தூரமே இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக DCZMA எப்படி ஒப்புதலளித்தது? இதை எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திடமும் நீதிமன்றத்திடமும் மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அய்க்கியப்பேரவை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கற்புடையார் வட்டம் (சிங்க...
posted by hasbullah mackie (dubai) [09 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15776

இந்த விஷயம் குறித்து புதிய நகராட்சி தலைவரின் அறிக்கையை எதிர் பார்க்கிறோம்.... நகர் மன்ற உறுப்பினர்கள் கூடி இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்..... நல்ல முடிவுக்காக எதிர் பார்க்கிறோம் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் கனமழை!  (11/1/2012) [Views - 5350; Comments - 11]
நள்ளிரவில் கனமழை!  (10/1/2012) [Views - 2859; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved