காயல்பட்டினம் கால்நடை மருத்துவமனைக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர், 44 சென்ட் நிலம் அம்மருத்துவமனை வளாகத்தில் உள்ளது.
பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைய நகருக்குள் இடம் தேவை என்ற நிலையிருக்க, கால்நடை மருத்துவமனையிலிருந்து அதன் தேவைக்குப் போக எஞ்சிய நிலத்தை நகராட்சியிடம் வழங்கக் கோரி கடந்த காலத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதன் பலனாக, அவ்வாறு எஞ்சிய நிலத்தை காயல்பட்டினம் நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நகராட்சிக்கு சேர வேண்டிய நிலத்தை அளக்கும் பணி 28.12.2011 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்னிலையில், பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம் தலைமையில், அளவீட்டாளர் கந்தப்பன் நிலத்தை அளவீடு செய்தார். நகராட்சி உறுப்பினர் இ.எம்.சாமி, சமூக ஆர்வலர் சாமு ஆகியோர் உடனிருந்தனர்.
|