காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளையின் 06ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் மர்ஹூம் ஹாஜி கே.வி.ஏ.டி.புகாரி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, 28.12.2011 அன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை காயல்பட்டினத்திலும், திருச்செந்தூரிலும் ஐம்பது மரக்கன்றுகள் நடப்பட்டன.
காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (தைக்கா பள்ளி) வளாகத்தில் 10 மரங்கள் நட்டப்பட்டன. அப்பள்ளியின் தலைமையாசிரியை புனிதா இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரங்களை நட்டினார்.
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில் 5 மரங்கள் நட்டப்பட்ட. அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி, அலுவலக பொறுப்பாளர் சித்தி ரம்ஸான், சமூக சேவகர் எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரங்களை நட்டினர்.
காயல்பட்டினம் புறவழிச்சாலையில் 5 மரங்கள், ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் 2 மரங்கள் நட்டப்பட்டன.
காயல்பட்டினம் நகர்மன்ற வளாகத்தில் 5 மரங்கள் நட்டப்பட்டன. அவற்றை, நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா ஆகியோர் நட்டினர்.
மரைக்கார் பள்ளித் தெருவில் 5 மரங்கள் நட்டப்பட்டன. அவற்றை, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஹைரிய்யா நட்டினார்.
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்துக் கழக அலுவலக வளாகத்தில் 15 மரங்கள் நட்டப்பட்டன. இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரங்களை நட்டினார். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஞானசேகரன், அதன் துணை ஆய்வாளர் கே.சந்திர சேகர் ஆகியோரும் மரங்களை நட்டினர். முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்செந்தூர் கோயில் வரவேற்பு வாயிலுக்கெதிரிலுள்ள பகுதியில் 1 மரம், திருச்செந்தூர் பிரதான வீதியில் 2 மரங்கள் என மொத்தம் 50 மரங்கள் நட்டப்பட்டன.
பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி நடைபெற்ற இந்த மரம் நடுவிழாக்கள் அனைத்தும், கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் செய்திருந்தார்.
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக,
ஃபாஸில் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |