மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் (தூக்குப் பைகள், கோப்பைகள் உள்ளிட்ட) பொருட்களை காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 01.01.2012 முதல் தடைசெய்து நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை, வணிக நிறுவன உரிமையாளர்களிடையே ஏற்படுத்தும் நோக்குடன் இன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் களத்தில் இறங்கினர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம், தலைமை அலுவலர் சக்தி குமார் அடங்கிய குழுவினர் காயல்பட்டினம் பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், பலகாரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும், மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களால் விளையும் கெடுதிகள், அதனைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தகவல்கள், நகராட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு ஆகிய தகவல்கள் அடங்கிய பிரசுரத்தை அந்நிறுவன உரிமையாளர்களிடம் வினியோகித்தனர்.
இந்நிகழ்வுகளின்போது, நகர்மன்ற உறுப்பினர் ஜமால் உடனிருந்தார். |