ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீ நகரில் காயல் நல மன்றம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் காயலர்களின் கலந்தாலோசனை கூட்டம் சென்ற 17ஆம் தேதி நஜ்தா சாலையில் அமைந்துள்ள ஈடிஏ சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. அப்போது துபை காவா அமைப்பின் தலைவர் ஆடிட்டர் JSA புகாரி அவர்களின் வழிகாட்டுதலின் பலனாக அபுதாபியில் வாழும் காயலர்களுக்கென்று ஒரு அமைப்பு உருவாக்குவதன் பொருட்டு இந்த ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அபுதாபியில் காயல் நல மன்றம் அமைப்பதின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் SAC ஹமீது துவக்கவுரை ஆற்றிய பின்னர், அவரது கருத்தை ஆமோதித்து மவுலவி ஹுசைன் மக்கி மஹ்ளரி, ஆர்க்கிடெக்ட் ஹபீபுர் ரஹ்மான், ஹாபிஸ் இஸ்ஹாக் லெப்பை, முசஃப்பா ரிபாயி, ஹுபைபு, முஹியித்தீன்(FNC) ஆகியோர் உரை நிகழ்த்தினர். முடிவாக அபுதாபியில் காயல் நல மன்றம் அமைப்பதென்று அனைவரது ஏகோபித்த ஆதரவோடு தீர்மானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மெல்கோ இம்தியாஸ் அகமது அவர்கள் கவுரவ தலைவராகவும், மவுலவி ஹாபிஸ் ஹபீபுர் ரஹ்மான் செயல் தலைவராகவும் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர். ஏனைய நிர்வாகிகளை தேர்தெடுக்கும் பொறுப்பு தலைமை வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெள்ளியன்று முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டம் ஹம்தான் சாலை 'ருசி' ரெஸ்டரண்ட் பேன்க்குவட் ஹாலில் (ஜனவரி 13 வெள்ளியன்று) மாலை 6 மணிக்கு துவங்கும் என்றும் அபுதாபி காயலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறும் மன்றத் தலைவர் மவுலவி ஹபீபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மவுலவி ஹாபிஸ் ஹபீபுர் ரஹ்மான் மஹ்ளரி அவர்கள தலைமை உரையாற்றினார்.
முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியம் குறித்து பெருமானர்(ஸல்) அவர்களது பொன்மொழிகளை மேற்கோள் காட்டி பேசினார். முன்மொழியப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தில், அபூதபீ வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அபூதபீ காயல் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.C.ஹமீத்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |