17.12.2011 அன்று காலமான காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் மாமனார் - அண்மையில் காலமான எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் மரைக்கார், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசகரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான - 25.12.2011 அன்று காலமான ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் அதன் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ் போதுமான்வன்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் மாமனாரான - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் மரைக்கார் அவர்கள் மற்றும்
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்களின் மறைவுச் செய்தி கேள்வியுற்று ஆழ்ந்த துயரமடைந்தோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியையும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மிக உயர்ந்த பாக்கியத்தை அவர்களுக்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவர்கள்தம் குடும்பத்தினருக்கு தக்வா சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இந்த பேரிழப்பை தாங்கும் அழகிய பொறுமையையும், மன வலிமையையும் வல்ல இறைவன் அவர்களுக்கு தந்தருள ஏக வல்லோனை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பாக,
M.H.முஹம்மத் ஸாலிஹ்,
பாங்காக், தாய்லாந்து.
செய்தி திருத்தப்பட்டது. (27.12.2011 - 14:09hrs) |