தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 26ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 06.30 மணிக்கு, காயல்பட்டினம் ஆஸாத் தெருவிலுள்ள ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில்,
(1) நகர நிர்வாக சீரமைப்பு...
(2) இட ஒதுக்கீட்டைவலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தல்...
(3) மணிச்சுடர் நாளிதழ் நிருபர் நியமனம்...
என்பன குறித்து விவாதித்து, முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முஸ்லிம் லீக் நகர கிளை உறுப்பினர்களுக்கு இக்கூட்டம் குறித்து அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. |