நூலகத்தை இன்னும் பல வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக அதிகளவில் புரவலர்களைச் சேர்க்க வேண்டுமென காயல்பட்டினம் அரசு பொதுநூலக வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள்:
கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் 18.12.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, நூலக புரவலரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா தலைமையில் நூலக வளாகத்தில் நடைபெற்றது. நூலக ஆர்வலர் ஜமேஷா, புரவலர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நூலக வாசகர் வட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியருமான எம்.அப்துல் ரசாக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கூட்டத் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தவைலருமான ஐ.ஆபிதா தலைமையுரையாற்றினார்.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியரும், நூலக புரவலருமான எஸ்.எஃப்.முஹம்மத் முஹ்யித்தீன் சுலைமான், காயல் கருப்பசாமி, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நூலக ஆர்வலர்களான பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எஸ்.நெய்னா முஹம்மத், எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், எம்.இராமகிருஷ்ணன், கே.ஏ.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் துரைப்பாண்டியன், காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உரைகளின் துளிகள்...
*** பயனுள்ள தலைப்புகளில் பல நூற்களையும், நாளிதழ் - வார - மாத இதழ்களையும் நிறைவாகக் கொண்டுள்ள இந்நூலகத்தை பொதுமக்கள் - குறிப்பாக மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் பயன்படுத்த ஊக்கமளிக்கப்பட வேண்டும்...
*** பெண்களுக்கென இந்நூலகத்தில் தனிப்பிரிவு துவக்கப்பட வேண்டும்...
*** மாணவர்களுக்கு இந்நூலகத்தின்பால் ஆர்வத்தை வரவழைக்கும் பொருட்டு, தற்கால சூழலுக்கேற்ப கணனி மூலம் இ-பேப்பர் உள்ளிட்டவற்றை படிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும்...
*** முதலில் ஆசிரியர்கள் கணனி பற்றியும், வலைதளங்கள் பற்றியும் போதி அறிவை வளர்த்துக்கொண்டு, மாணவர்களுக்கு இவற்றிலுள்ள நல்ல பகுதிகளையும், தீய பகுதிகளையும் முறைப்படி விளக்கி, நல்ல பகுதிகளைப் பார்க்கும் வகையில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்...
இவ்வாறு பல ஆலோசனைகளை கருத்துரை - வாழத்த்துரைகள் வழங்கியோர் தெரிவித்தனர்.
புதிய புரவலர்கள்:
அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் எம்.அஹ்மத் நெய்னா, காயல்பட்டினம் நகர்மனற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், கூட்டம் நடைபெறுகையிலேயே ரூபாய் ஆயிரம் நிதியளித்து, தங்களை நூலகப் புரவலர்களாக இணைத்துக்கொண்டனர்.
கணனி அன்பளிப்பு:
நூலகத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒருகட்டமாக, கணனி ஒன்றை அன்பளிப்புச் செய்யுமாறு, கூட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ மேஜரும், தனது உறவினருமான எம்.அஹ்மத் நெய்னா அவர்களிடம், நூலக புரவலரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா கேட்டுக்கொள்ள, இவ்வகைக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் தொகையை விரைவில் வழங்குவதாக அவ்விடத்திலேயே அவர் அறிவித்தார். இவ்வறிவிப்பை, அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
நிறைவாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, நூலகரும் - வாசகர் வட்ட செயலருமான ஏ.முஜீப் வாசித்து, நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், நூலக புரவலர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 1 - சுகவீனமுற்றுள்ள நூலகப் புரவலர் குணமடைய பிரார்த்தனை:
நமது நூலகப் புரவலரும், சமூக சேவைக்கு என்றே தன்னை அர்பணித்து வருகின்ற அரிமா. துளிர். அல்ஹாஜ் M.L.சேக்கனா லெப்பை அவர்கள் உடல் சுகவீனம் அடைந்து கடந்த 16.12.2011 வெள்ளியன்று சென்னையில் இறுதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் தமது சேவையைத் தொடர்ந்து செய்ய வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
தீர்மானம் 2 - புதிய புரவலர்களுக்கு நன்றி:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் நமதூர் கிளை நூலக வளர்ச்சிக்காக மனமுவந்து ரூ.1000 நிதியளித்து, நமது நூலகப் புரவலராக தங்களை இணைத்துக் கொண்ட
(i) ஓய்வு பெற்ற அரசு ஊழியரும், நூலக ஆர்வலருமான திரு.K.வில்சன் அவர்களுக்கும்,
(ii) பல்வேறு சமூக சேவைகளை சப்தமில்லாமல் செய்து வரும் அரிமா அல்ஹாஜ் R.P.சம்சுத்தீன் அவர்களுக்கும்,
(iii) காயல்பட்டினம் அரசு பொது நூலகத்திற்கு எண்ணிடலங்கா உதவிகள் செய்த மனித நேயர் ஜனாப் பாளையம் இபுராஹீம் காக்கா அவர்களின் அருமைப்புதல்வியும், நமதூர் நகர்மன்றத் தலைவியுமான திருமதி.I.ஆபிதா அவர்களுக்கும்,
(iv) பிரபல எழுத்தாளர் "முத்தமிழ் கலையரசி" ரஹிமா அவர்களுக்கும்,
(v) ஜனாப் சாளை S.அபுல்ஹஸன் அவர்களுக்கும்,
(vi) பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் "ஜூவல் ஜங்ஷன்" அதிபர் அரிமா K.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும்,
(vii) அரசு கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசியர், முனைவர் S.S.நெய்னா முஹம்மது M.Sc., Ph.D., அவர்களுக்கும்
நன்றிகளை தெரிவிப்பதோடு, நூலகம் மென்மேலும் வளர்ச்சி பெற்று நமதூர் மக்கள், மாணவ, மாணவிகள் பயன்பெற நமது வாசகர் வட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கி உதவுமாறு வேண்டிக் கொள்கிறது.
தீர்மானம் 3 - தேசிய நூலக வார விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி:
கடந்த மாதம் L.K.மெட்ரிக்குலேசன் பள்ளியில் நமது வாசகர் வட்டம், காயல்பட்டினம் அரிமா சங்கம், K.V.A.T. அறக்கட்டளை மற்றும் காயல்பட்டினம் காக்கும் கரங்கள் இணைந்து நடத்திய "44-வது தேசிய நூலக வாரவிழா"-வினை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் இவ்விழாவினையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தமது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை கலந்து கொள்ளச்செய்து, அவர்களுக்கு நூலக ஆர்வத்தை ஏற்படுத்த ஒத்துழைத்த அனைத்து பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4 - அன்பளிப்பாளர்களுக்கு நன்றி:
நமது நூலக வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப புதிய பதிவேடு ஒன்றை நன்கொடையாக அளித்து வரும் நூலகப் புரவலர் காயல் கருப்பசாமி அவர்களுக்கும், ஆங்கில நாதிதழை நன்கொடையாக அளித்துவரும், இரத்தினாபுரி திருமதி.L.வளர்மதி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5 - அதிக எண்ணிக்கையில் புரவலர்களை இணைத்தல்:
தனவந்தர்களும், கல்வியாளர்களும் நிறைந்துள்ள பெரமைமிகு நமதூரில், கடந்த 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளை நூலகத்தின் "நூலகப் புரவலர்" எண்ணிக்கை மிகுந்த வருந்தத்தக்க அளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. "நூலக புரவலர்" திட்ட விபரங்களை இங்கு வருகை தந்திருக்கும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைவரும் நமதூர் தனவந்தர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆகியவர்களை சந்தித்து நமதூர் கிளை நூலகம் புரவலராக இணைக்க முயற்சிகள் மேற்கொள்வது.
தீர்மானம் 6 - புதிய நிர்வாகிகள்:
உயர்திரு பொது நூலக இயக்குனர் அவர்களின் ஆணைப்படி வாசகர் வட்ட நிர்வாகிகள் பின்வருமாறு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-
கௌரவ தலைவர்:
ஜனாப் பாளையம் இபுராஹீம் அவர்கள்
தலைவர்:
அரிமா அல்ஹாஜ் T.A.S.முஹம்மது அபூபக்கர், B.Com., C.A.llB அவர்கள்
துணைத் தலைவர்:
ஆசிரியர் M.அப்துல் ரசாக் அவர்கள்
செயலாளர்:
A.முஜீபு (நூலகர்)
துணைச் செயலாளர்கள்:
1) திரு.K.வில்சன் அவர்கள் (நூலக புரவலர்)
2) திரு.காயல் A.கருப்பசாமி அவர்கள் (நூலகப் புரவலர்)
வாசகர் வட்ட ஆலோசகர்கள்:
1) முனைவர் S.S.நெய்னா முஹம்மது M.Sc., Ph.D (நூலகப் புரவலர்)
2) ஜனாப்.S.F.முஹம்மது முகைதீன் சுலைமான் M.Sc., M.Phil., M.Ed (நூலகப் புரவலர்)
3) ஜனாப்.M.S.நெய்னா முஹம்மது B.Sc., M.A. B.Ed.,
வாசகர் வட்ட கௌரவ ஆலோசகர்கள்:
1) திருமதி. I.ஆபிதா B.Sc., B.Ed., (நூலக புரவலர்)
2) அல்ஹாஜ். S.O.அபுல்ஹஸன் கலாமி அவர்கள் (நூலகப் புரவலர்)
3) மௌலவி K.சுல்தான் சலாஹூதீன் ஆலிம் அவர்கள்
வாசகர் வட்ட உறுப்பினர்கள்:
01) அரிமா. துளிர். அல்ஹாஜ் M.L.சேக்கனா லெப்பை அவர்கள்
02) அல்ஹாஜ் வாவு.K.S.முஹம்மது நாசர் அவர்கள்
03) ஜனாப்.S.H.அலாவுதீன் அவர்கள்
04) ஜனாப்.ஜமேஷா மதார் அவர்கள்
05) ஜனாப்.S.சாஹூல்ஹமீது அவர்கள் v
06) கவிஞர் S.சேகு அப்துல் காதர் அவர்கள்
07) அரிமா. அல்ஹாஜ்.R.P.சம்சுத்தீன் அவர்கள்
08) ஜனாப்.M.N.ஷாநவாஸ் அவர்கள்
09) ஜனாப்.A.L.S.இப்னு அப்பாஸ் அவர்கள்
10) திரு.V.M.பால முருகன் அவர்கள்
11) திரு.M.ராம கிருஷ்ணன் அவர்கள்
12) திரு.தேசிகன் அவர்கள்
13) திரு.G.பிரகாஷ் D.C.E., அவர்கள்
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. |