துணைத்தலைவர் ஹாஜி எம்.என்.மூஸா நெய்னா மறைவுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி இரங்கல்!
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் முன்னாள் தலைவருமான காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, 25.12.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.30 மணியளவில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, அவர் துணைத்தலைவராக இருந்த முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து, அதன் நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், முன்னாள் மாணவர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
எங்கள் பள்ளியின் துணைத்தலைவரும், சமூக ஆர்வலரும், பொதுநல சேவகருமான அல்ஹாஜ் எம்.எல்.மூஸா நெய்னா அவர்கள்> 25.12.2011 ஞாயிற்றுக்கிழமை காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூஊன்.
அன்னாரின் மறைவு எங்கள் பள்ளிக்கும், நம் ஊருக்கும் ஈடு செய்ய முடியாததாகும். அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் பள்ளியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ், அவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாசகங்கள் அடங்கிய பிரசுரம், இன்று காலையில் அவரது ஜனாஸா நல்லடக்கத்தின்போது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம். |