காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், ஹாங்காங் - இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் முன்னாள் தலைவருமான காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, 25.12.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.30 மணியளவில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, ஹாங்காங் கவ்லூன் பள்ளி கேளரங்கில், 26.12.2011 திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப் பின், இரவு 07.00 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், மர்ஹூம் அவர்களின் பிழைபொறுப்பிற்காக பிரார்த்தனை செய்து, உறவினர்களுடன் கைலாகு (முஸாஃபஹா) செய்யப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, அவரது குடும்பத்தார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ. |