காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவருமான, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா, 25.12.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை வரை பொதுமக்கள் பார்வைக்காக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 11.00 மணிக்கு அங்கிருந்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு ஜனாஸா சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
அவரது மகன் ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப் தொழுகையை வழிநடத்தினார். பின்னர், காலை 11.30 மணியளவில் அப்பள்ளியின் மேற்குப்பகுதி மையவாடியில், வரகவி காஸிம் புலவர் நாயகம் அவர்களின் தர்கா வளாகத்திற்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், மார்க்க அறிஞர்களான காழீ அலாவுத்தீன் ஆலிம், மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் செயலர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி, பொருளாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ,
கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, மஸ்ஜித் மீக்காஈல் என்ற இரட்டைக்குளத்துப் பள்ளி நிர்வாகி ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், குருவித்துறைப்பள்ளி செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர்,
இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், செய்தித் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அதன் செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி டைமண்ட் செய்யித், ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை, அல்அமீன் இளைஞர் சங்க ஒருங்கிணைப்பாளர் மஹ்மூத் ரஜ்வி,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அக்கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன் மற்றும் ஆசிரியர்கள், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகி ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, அதன் செயலர் ஹாஜி எஸ்.டி.லபீப், தலைமையாசிரியர் ஸ்டீஃபன் மற்றும் அலுவலர்கள், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், அதன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசகர்களான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், அதன் செயலர் ஹாஜி யு.ஷேக்னா லெப்பை, செயற்குழு உறுப்பினர் ஹாஜா அரபி, ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான மக்பூல்,
அமீரக காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, அதன் நிர்வாகி ஹாஜி துணி உமர், சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம்,
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகர பிரமுகர்கள் ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ஹாஜி பிரபுத்தம்பி உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
M.ஜஹாங்கீர்.
கூடுதல் படம் இணைக்கப்பட்டுள்ளது. (26.12.2011 - 23:54hrs) |