மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் பேரணி நடத்தினர்.
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குத் தடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு (என்.எஸ்.எஸ்.) மாணவியர் பேரணி, கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி தலைமையில் 17.12.2011 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் அனைத்து துறைகள் சார்ந்த வகுப்பறைகளுக்கும் சென்ற இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள், மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களினால் விளையும் தீமைகளை மாணவியருக்கு விளக்கினர். பின்னர், முதற்கட்டமாக கல்லூரி வளாகத்திற்குள் அப்பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க தீர்மானிக்கப்பட்டது.
இப்பேரணியில் கல்லூரியின் பேராசிரியையரும் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு அலுவலர் கு.துரைச்செல்வி மற்றும் மு.சூரத் ஷீபா ஆகியோர் செய்திருந்தனர். |