வரும் 25.12.2011 அன்று கிறிஸ்துவ பண்டிகை வருவதையொட்டி, பொதுமக்கள் கடற்கரையில் விசாலமாக அமர்வதற்காக காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் மீனவர் சமுதாயத்தினர் வசிக்கும் கடற்கரைப் பகுதியில் முட்செடிகளை அகற்றித் தருமாறு அப்பகுதி பொதுமக்கள், அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணியிடம் முறையிட்டனர்.
அவர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், அப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு முட்புதர்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி கடற்கரை மணற்பரப்பு தற்போது விசாலமாக காணப்படுகிறது.
4. Re:கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்... posted byPS ABDUL KADER (JEDDAH)[24 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15015
உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட உவகை பெருக்குடன் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் எனதருமை கடற்கரை மீனவ கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.
இயேசுபிரான் அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய திருமகன். இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன். அவர் அன்பை போதித்தார். அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணம் ஆக்கினார்.
அன்பு வார்த்தையாலும் அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம் இந்த இனிய திருநாளில் நமதூரில் அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அன்புக்குரிய கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross