செய்தி எண் (ID #) 7751 | | |
புதன், டிசம்பர் 21, 2011 |
நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் மாமனார் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4485 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (35) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் மாமனாரான - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஹாஜி எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் மரைக்கார் இன்றிரவு 07.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
இவர், மர்ஹூம் என்.கே.ஷேக் அப்துல் காதிர் என்ற ஷேக்னா என்பவரின் மகனும், மர்ஹூம் ஹாஜி என்பவரின் மருமகனும், ஹாஜி எஸ்.கே.எம்.நூருத்தீன் என்பவரின் சகோதரரும், ஹாஜி அஹ்மத் நெய்னா, ஜனாப் அபுல்ஹஸன், ஹாஜி ஷர்ஃபுத்தீன், ஹாஜி ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் சகோதரியின் கணவரும்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவின் கணவரான ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தம்பி முனாஃபர் ராஜா ஆகியோரின் தந்தையும், முஹம்மத் அஸ்ஹருத்தீன் என்பவரின் பாட்டனாரும், ஜனாப் ஸலீம், ஜனாப் தமீம் ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை காலை 10.30 மணிக்கு, தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |