கடந்த 14.12.2011 அன்று கூடிய காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) செயற்குழுவில், நகர்நல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
14.12.11 புதன் அன்று அன்னை கதீஜா மதரஸா காயிதேமில்லத் நகரில் சுமார் மாலை 7 மணியளவில் காயல்பட்டணம் நல அறக்கட்டளை (KWT) யின் 7வது செயற்குழு கூட்டம் ஹாஜி டி.ஏ.எஸ் அபுபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
துவக்கமாக KWT யின் பொது செயலாளர் முஹம்மது ஆதாம் சுல்தான் அவர்கள் KWT யின் செயலாக்கம் பற்றியும் அடுத்து நடத்த இருக்கின்ற பொது நல நிகழ்ச்சிக்குரிய விபரங்களையும் விளக்கினார்.
செயற்குழுவினர் மூலம் கீழ்க்கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
*** இஸ்லாம் கூறும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை கையாளாத நிலை
*** குடும்பத்துக்குள்ளேயே விட்டு கொடுக்கும் குணமில்லாததால் குடும்பமே பிரியும் பரிதாபநிலை
*** இளம் பெண்களின் ஒழுக்க வாழ்க்கை நெறியை சரியாக வகுக்காததால் ஏற்படும் விபரீத நிலை.
*** குறிப்பாக மன விலக்கு, தோல்வியில் வந்து முடியும் மன வாழ்வு
*** நம் குடும்பங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், நமதூர் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் ஒழுக்க ரீதியான சவால்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள்.. போன்ற உளவள தேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் வேண்டும் என்ற கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிச,20-21 ஆகிய இரு தினங்களில் நகரில் உளவள விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவதென விவாதிகாப்பட்டது.
தீர்மானங்கள்:-
1)தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மன நல ஆலோசகர் சகோதரி A.S குர்ஷித் பேகம் அவர்களை நம் ஊருக்கு வரவழைத்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிச,20-21 ஆகிய இரு தினங்களில் மன நல கருத்தரங்கம் ஒன்று நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது
2) சென்ற நகராட்சி தலைவரிடம் முறையிட்டு வந்த L.F ரோட்டு குடியிருப்பு மக்களின் தென்பகுதியில் மலைபோல் குவியும் குப்பை அகற்றும் பணியை K.W.T .தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் நகராட்சியிடமும் தொடர்ந்து முறையிட்டு தீர்வு காணுமாறு வேண்டிக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
3) நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் K.W.T ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை (தலைவருக்கு) ஆதரிப்தென்று நிலைப்பாட்டை மக்கள் முன் விரிவாக விளக்கி ஜனநாயக முறையில் உள்ளாட்சி தேர்தல் கள பணியில் தீவிரமாக இறங்கியது. எங்கள் K.W.T யினரின் நிலைப்பாட்டை எதிர்க்கும் முகமாக சிலர் ஜனநாயக மரபுக்கு முற்றிலும் மாற்றமாகவும், அசிங்கமான வார்த்தைகளால் KWT யின் அங்கத்தினரை நேரிலும், சில உறுப்பினர்களை தொலைபேசி மூலமாக மிரட்டியதோடு காவல்துறையில் பொய் புகாரும் கொடுத்திருக்கின்றனர்.
இந்த உண்மைக்கு புறம்பான செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் எதிர்காலத்தில் இது போன்ற தொல்லைகள் தொடரா வண்ணம் அதற்குரிய சட்ட பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வது என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
4) அடுத்து KWT .மூலமாக ஊரில் உள்ள விசாலமான தெருக்களில் மரக்கன்றுகளை நட்டு அதை அந்தந்த தெருவாசிகளே பராமரிக்க வலியுறுத்துவதென்றும், பசுமை காயலை உருவாக்குதல் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இறுதியாக மஜ்லிசே கஃப்பாரவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஃபிர்தவ்ஸ்,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம் நல அறக்கட்டளை,
காயல்பட்டினம். |