காயல்பட்டினத்தில் பல்வேறு தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலைகள் அமைக்க, கடந்த நகர்மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டு, தூத்துக்குடியைச் சார்ந்த ரம்போலா என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனடிப்படையில் நகரின் பல்வேறு தெருக்களில் இன்றளவும் புதிய சாலை அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கவனத்தில் கொள்ளாத சில சிமெண்ட் சாலைகளில், ஓரக்கல் நிறுவி, முறைப்படி பாதுகாப்பான ஓரங்கள் அமைப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் கீழ நெய்னார் தெரு, சித்தன் தெரு உள்ளிட்ட தெருக்களில் சிமெண்ட் சாலை புதிதாக அமைக்கப்பட்டும் இதுவரை ஓரக்கல் நிறுவப்படவில்லை. இதில் சித்தன் தெரு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு சில தினங்களே ஆனபோதிலும், கீழ நெய்னார் தெரு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு பல வாரங்களாகிறது.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, 21.12.2011 அன்று (நேற்று) மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் சித்தன் தெருவில் சிறிய குத்பா பள்ளி அருகிலும், கீழ நெய்னார் தெருவிலும் சாலைகளை ஆய்வு செய்தார்.
சித்தன் தெருவில், சிறிய குத்பா பள்ளியருகில் சாலை ஓரங்களில் மணல் பரத்திக் கொண்டிருந்த ஊழியரிடம், ஓரக்கல் அமைப்புப் பணி குறித்து அவர் விசாரித்தறிந்தார்.
|