Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:43:43 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7754
#KOTW7754
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 22, 2011
அநியாயத்துக்கு விசுவாசமா இருக்காங்களே... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3893 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில், நேற்று காலையிலிருந்தே தெரு விளக்குகள் எரிந்த காட்சி:-



தினமும் மாலை 06.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை நகரில் தெருவிளக்குகள் எரிய நேர வரையறைக் கருவி (டைமர்) மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழமைபோல காலை 06.00 மணிக்கு அணைய வேண்டிய விளக்குகள் இந்தத் தெருவில் மட்டும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது.

இத்தகவலறிந்து, மாலை 04.30 மணியளவில் அங்கு வந்து பழுது நீக்கிய மின் வாரியத்தினர், மின் வினியோக ஸ்விட்ச்சில் உள்ள பழுது காரணமாக இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அநியாயத்துக்கு விசுவாசமா ...
posted by M.N Seyed Ahmed Buhari (Chennai(Mannady)) [22 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14971

இப்படி நாள் முழுக்க ரோடு லைட் அணையாமல் இருக்கு... இப்படி இருந்த ஏன் மின்சாரம் தட்டுப்பாடு வராது.... இப்ப ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பவர் கட்.... இந்த நிலைமை நீடித்தால் 4 மணி நேரம் 8 மணி நேரம் ஆகும்.....

அப்புறம் இதுல வேற 1 - 04 - 2011 முதல் மின்சாரம் கட்டணம் உயர்வூ....

மினசாரம் சிக்கனம் தேவை அக்கணம்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அநியாயத்துக்கு விசுவாசமா ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14973

இந்த தெரு மட்டுமா, எல்லா தெருவிலும் இந்த கதைதான். நகரமன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் வார்டை வலம் வந்தாலே இதை கண்டு பிடித்து சரி செய்யலாம்.

காலையில் சுப்ஹு தொழுதுவிட்டு டீ குடித்து விட்டு வாக்கிங் போகிறவர்கள் தினசரி கண்டு மனம் வெதும்பி போகிறோம். 14 உறுப்பினர்களில் யார் ஒருவர் கண்ணிலுமா இந்த அவலம் தெரியாமல் போய்விட்டது. என்ன செய்வது புதிய ஆட்சி வந்தால் பாலாறு தேனாறு ஓடும் என்று சொல்வார்கள், ஆனால் பாம்பும் தேளும்தான் ஓடுகிறது என்று ஒரு சுதந்திரம் பெறுவதற்கு உழைத்தவர் சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.

தலை வலிக்கு தலையணையை மாற்றினால் சரிவராது. மாற்றம் உள்ளத்தில் வரவேண்டும், அல்லது மாற்றத்தை கொண்டுவரும் உண்மையான அதிகாரிகள் மனசாட்சிக்கு பயந்து பணியாற்றும் தொழிலாளிகள் உருவாக வேண்டும். நீங்களாவது படம் பிடித்து காட்டினீர்களே, நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. டைமர் கருவி கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டது
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [22 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14975

மழைக்காலம்.. மேகமூட்டமாக இருப்பதால், டைமர் கருவி கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டது.. அம்புட்டு தான்.

நூஹு தம்பி காக்கா, இதற்க்கு எல்லாம் ஆட்சியை குறை கூறலாமா.. பெரியார் அணை பிரச்சனை முதல் கூடங்குளம் பிரச்சனை வரை உள்ளது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4.
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [22 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14983

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இப்படி தெருவிளக்குகள் " அணையா விளக்காக " 24 மணி நேரமும் எரிவது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கு காரணம் மின்சார வாரியமும் , நகராட்சி மன்றமும் மட்டுமல்ல - அந்தந்த பகுதி மக்களும் , வார்டு உறுப்பினரும் சேர்ந்துதான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இது போன்ற வீண் விரயங்களை தடுக்கலாம்.
---------------------------------------------
பொறுப்பற்ற பதில் :

பகலிலும் விளக்குகள் ஏன் எரிகிறது என்று மின் வாரியத்தை கேட்டால், பழுது பார்க்கிறது மட்டும்தான் எங்கள் வேலை - விளக்கை எரியவிடுவதும், அணைப்பதும் நகராட்சியின் பொறுப்பு என்பார்கள்.

* ஒரு வேளை அவர்களுடைய ஒப்பந்தப்படி இது உண்மையாகக்கூட இருக்கலாம் *.

நகராட்சியை அணுகி கேட்டால் , எங்களிடம் போதிய ஊழியர்கள் இல்லை என்றோ அல்லது மின் விநியோக சுவிட்சில் பழுது , டைமர் சரியாக வேலை செய்யவில்லை அதனால்தான் இரவுப்பகலாக விளக்கு எரிகிறது என்று சொல்வார்கள். * இந்த மாதிரியான மறுமொழி ஏற்றுக்கொள்ளப்பட தக்கதல்ல*.
----------------------------------------------
நகராட்சியின் திறமையற்ற நிர்வாகம் :

நகராட்சி நிர்வாகம் போதிய ஆள் இல்லை என்ற ஒரு காரணத்தை எல்லா விசயங்களுக்கும் பயன்படுத்தவது முறையாகாது.

* குடிநீர் முறையாக திறந்துவிடப்படுவதில்லை ?

* தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை ?

* குப்பைகளை தினமும் அள்ளுவதில்லை ?

இப்படியாக எந்த ஒரு செயலின் தாமதத்துக்கும் பதிலாக வருவது " நம்ம நகராட்சியில் தேவையான அளவு ஊழியர்கள் இல்லை " என்பதுதான்.

தேவையான அளவுக்கு ஊழியர்கள் இல்லை என்றால் ஊழியர்களை பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும் - அதல்லாது போதிய ஊழியர்கள் இல்லை என்ற காரணத்தையே சொல்லி தங்களுடைய கடமைகளை செய்யாமல் தட்டிக் கழிப்பது நேர்மையான நிர்வாகத்திற்கு அழகல்ல.

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அந்த பதவிக்குரிய கண்ணியத்தை கொடுக்க வேண்டும் - அதல்லாது அந்த பதவியின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை பெறுவதிலோ அல்லது பெருமையை அடைவதிலோ எந்த பிரயோசனமுமில்லை.
------------------------------------------------
பொது மக்களின் பொறுப்பு :

பொதுவாக மின்சார வாரியமாகட்டும், நகராட்சிமன்ற நிர்வாகமாகட்டும் அவர்களின் சட்டதிட்டங்களின்படி , அவர்களுடைய அட்டவணைப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்.

மேலும் மக்களுடைய வேண்டுகோளுக்கிணங்க எதையும் பழுது பார்க்கவும், தேவையான சேவையையும் வரைமுறைகளுக்குட்பட்டு செய்வார்கள் அது அவர்களுடைய கடமை.

அதல்லாது 24 மணிநேரமும் தெரு, தெருவாக சுற்றி எங்கே விளக்கு எரியவில்லை அல்லது வீணாக எரிகிறது என்றோ ? - குப்பையை இந்த பக்கம் அள்ளவில்லை , அந்த பக்கம் அள்ளவில்லை என்றோ ? - தண்ணீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் ஓடுகிறது என்றோ ? அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!

எனவே மக்களாகிய நாம்தான் இந்த மாதிரியான குறைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இது நமது கடமை.

எங்காவது விளக்கு எரியவில்லை அல்லது வீணாக எரிகிறது என்றால் மக்கள் அந்த பகுதி கவுன்சிலரிடம் சொல்ல வேண்டும்

குப்பையை அள்ளாமல் சென்றிருந்தாலும் , தண்ணீர் வரவில்லை என்றாலும், வீணாக ஓடினாலும் அவைகளை மக்கள் முதலில் சொல்ல வேண்டியது அந்த பகுதி கவுன்சிலரிடமே.

மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் மக்கள் அவரை அந்த பகுதிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் - நம்ம பகுதி மக்கள் ஒற்றுமையானவர்களாக இருந்தால் கவுன்சிலர் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவரை நல்லவராக வைப்பது மக்களின் பொறுப்பு.
----------------------------------------------
கவுன்சிலர்களின் கடமை :

எல்லா ஊர்களிலும் உள்ளாட்சி அமைப்புக்களில் மக்கள் கவுன்சிலர்களிடமிருந்து எதிர் பார்க்கும் முதல் மூன்று முக்கிய விசயங்கள் தண்ணீர், தெரு விளக்கு மற்றும் குப்பையை அப்புறப்படுத்துதல்.

எந்த ஒரு கவுன்சிலர் இந்த முக்கிய மூன்றையும் சரியாக செய்யவில்லையோ அல்லது செய்ய முடியவில்லையோ நிச்சயமாக அவருக்கு நல்ல பெயர் கிடைக்காது - இது உலகம் முழுவதுக்கும் பொருந்தும்.

ஆகவே நமது கவுன்சிலர்கள் அவரவர் வார்டுகளில் தினமும் வாக்கிங் சென்றாலே போதும் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

இரவில் சென்றால் விளக்குகள் எரிகிறதா? இல்லையா? என்பதும்.

பகலில் ஒரு நேரத்தை ஒதுக்கி உங்கள் பகுதியை சுற்றி வந்தால் குப்பை சமாச்சாரம் மற்றும் தேவையானவையையும் அறிய முடியும்.

இது உங்கள் கடமை இந்த அடிப்படை சேவையை நீங்கள் செய்ய முடியவில்லை என்றால் ......................... நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Appreciate previous comment
posted by Riyath (Hong Kong) [23 December 2011]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 14990

I am agreed and impressed by the previous comment and would like to add one suggestion that if we have some *attractive* hotline (similar like dial 108 call for emergency ambulance) to report/suggest/escalate/share information with councilor office then people could use this.

Otherwise we cant expect people to visit councilor office everytime for every problems. Welcome for your comments on my suggestion. **Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அநியாயத்துக்கு விசுவாசமா ...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [23 December 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 14992

எல்லா நாளும் எல்லா எல்லா விளக்கும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க நான் பார்கவில்லை நானும் நடைபயற்சி செய்பவன்தான். ஏதோ ஓரிருநாள் நடந்திருக்கலாம். எல்லாவற்றையும் கவுன்சிலர்தான் கவனிக்கவேண்டும் எனபது ஏதோ ஒரு எஜமானரின் எதிர்பார்ப்பின் மனநிலை போல் தோன்றுகிறது.

போன் பண்ணி இப்படி விளக்கு எரிகிறேதே அணையுங்கள் என்று சொல்லிவிட்டு இங்கு கமென்ட் எழுதினால் நானும் நூஹு தம்பி காக்காவின் செயலுக்கு ஒரு சல்ல்யூட் அடித்திருப்பேன்.

அத்தர் குத்தியில் அணைத்து நீரையும் அப்படியே செலுத்தமுடியுமா? அங்கும் இங்கும் அணுவளவாவது சிந்ததான் செய்யும்.

ரோட்டின் குறுக்கே கிடக்கும் கம்பை தூக்கி போட கவுன்சிலர் தேவை இல்லை.

தேர்ந்தெடுப்பதோடு நம் கடமை முடிந்து விட்டதாக நம்மை போன்றவர்கள் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்.

sorry நூஹு தம்பி காக்காவிடம் இதை எதிர்பார்கவில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நாமும் கடமையாளரே ...!
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [23 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15003

M A ஆதம் சுல்தானின் கருத்து மிகவும் சரியே! நாமும் சில காரியங்களில் கடமையானோரே .வாக்கிங் தினமும் போகும் நாம் கொஞ்சம் கூடுதலாக நடந்து E B ஆபீஸ் சென்று அங்கு அவசர தேவைக்கு இருக்கும் பணியாளரிடம் விபரத்தை சொன்னால் நாமும், மின்சாரம் வீண் விரயம் ஆக இருந்ததை தடுத்த கடமையாளர்தானே!

அது மட்டும் இன்றி, நடைக்கு நடையும் ஆச்சு நல்ல காரியத்துக்கு நல்ல காரியமும் ஆச்சே!

உறுப்பினர் என்றால் நம் கூர்க்கா என்று நினைப்பதை விட்டு அவரையும் நம்மில் ஒருவர் என்று கருதி அவருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். எல்லாத்திலும் நோணி கோணி கருத்து எழுதாதீங்க சார்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மன்ற உறுப்பினர்களுக்கான புகார் மையம்
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [23 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15007

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் ரியாது அவர்கள் நினைப்பது போல் நமது நகராட்சியில் எல்லா கவுன்சிலர்களும் வாரம் முழுவதும் நகராட்சிக்கு வந்து அவர்கள் இருக்கையில் இருப்பது இல்லை.

அப்படி தினமும் கவுன்சிலர்கள் வந்து அமர்ந்தார்கள் என்றால் தாங்கள் கூறியது போல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் சேவையை பயன் படுத்திக்கொள்ளலாம்.

என்னுடைய கருத்தில் " மக்கள் முதலில் சொல்ல வேண்டியது அந்த பகுதி கவுன்சிலரிடமே " என்று கூறுவதின் பொருள் கவுன்சிலரை நேரில் பார்த்து , அல்லது அவருடைய சொந்த போனில் தொடர்பு கொண்டு சொல்ல வேண்டும் என்ற அருத்தத்தில்தான்.

கவுன்சிலருடைய ஆபீஸ்க்கு சென்று புகார் செய்வதென்பது இன்றைய நிலையில் 90% சாத்தியப்படாது.

ஆகையால் கவுன்சிலர்களை பொதுமக்கள் தொடர்புக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுடைய தொடர்பு நெம்பரை அந்தந்த ஏரியாவில் உள்ள பொது இடங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் மக்களின் பார்வைக்கு தெரியும்படி எழுதி வைக்கலாம்.
-----------------------------------------------
மன்ற உறுப்பினர்களுக்கான புகார் மையம் :

நமது நகராட்சி இப்போதைய நிலையில் ஆள் பற்றாக்குறை என்பதால் முடியாவிட்டாலும் - பிற்காலத்தில் கவுன்சிலர்களுக்கும் மக்களுக்கும் நெருக்கத்தையும் , சேவையையும் அதிகரிக்கும் வகையில் " மன்ற உறுப்பினர்களுக்கான புகார் மையம் " அமைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மக்களுக்கு நல்லமுறையில் சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிற கவுன்சிலர்களுக்கு " மன்ற உறுப்பினர்களுக்கான புகார் மையம் " என்று ஓன்று இருந்தால்தான் மக்கள் தரும் மனுக்களையும் , வாய்மொழி புகார்களையும் அவ்வவ்வப்போது அந்த புகார் மையத்தில் கொடுத்து முறையான நடவடிக்கை எடுத்து சேவையாற்ற முடியும்.

ஆகவே நமது நகராட்சி மன்றம் " மன்ற உறுப்பினர்களுக்கான புகார் மையம் " ஒன்றை விரைவில் அமைக்க ஏற்பாடு செய்வது நல்லது. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாள் முழுக்க நல்ல மழை!  (19/12/2011) [Views - 3037; Comments - 0]
இலக்கிய மன்ற விழா  (19/12/2011) [Views - 2654; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved