காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர் சார்பில், மாதந்தோறும் தொடராக நடத்தப்பட்டு வரும் தர்பிய்யா பயிற்சி வகுப்பின் இம்மாத வகுப்பு தஃவா - அழைப்புப் பணி பயிற்சி வகுப்பாக நடைபெற்றுள்ளது.
நிகழ்வுகள் குறித்து தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் திருப்பெயரால்
தொடர் தர்பிய்யா வகுப்பு-3 (தஃவா பயிற்சி)
நமது தஃவா சென்டர் மூலம் நடத்தப்பட்டு வருகின்ற தொடர் தர்பிய்யா வகுப்பான தஃவா பயிற்சி பட்டறையின் 3ஆவது வகுப்பு 18-12-2011 காலை முதல் மாலை வரை குறித்த நேரத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், பணியிலிருப்போர், உயர்பதவி வகிப்போர் உள்ளிட்டோர் இவ்வகுப்பில் கலந்துகொண்டனர்.
வகுப்பில் முதலாவதாக சென்ற வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றிய தேர்வு நடத்தப்பட்டது. பின்னர், ‘‘நாஸ்திக நண்பா;களே! நாசத்தை தவிர்ப்பீர்’’ என்ற தலைப்பில், ‘அந்நஜாத்‘ மாத இதழின் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் பாடம் நடத்தினார்.
அதில் நாத்திக நண்பர்களிடம் தஃவா செய்வது எப்படி, அவர்கள் குதர்க்கமாக கேட்கும் கேள்விகளுக்கு நயமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளிப்பது பற்றியும் மேலும்
1.Evolution Theory
2.Islam Related
3.General Questions போன்ற தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பாடம் நடத்தியதோடு, பின்வருமாறு கேள்விகளையும் கேட்டார்:-
பொதுக் கேள்விகள்:
1. நாத்திகம் எனும் கடவுள் மறுப்புக் கொள்கை எப்போது உருவானது? எந்த காரணத்திற்கு உருவாக்கப்பட்டது? அதன் கொள்கைகள் என்ன?
2. பெயரளவு முஸ்லிம்கள் இந்த நாத்திக சிந்தனையைப் பற்றி பேசுகிறாh;களோ இவா;களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?
3. ஆடு, மாடு, கோழிகளை ஹலால் பண்ண வேண்டும் என்று கூறும் நீங்கள் ஏன் மீனை ஹலால் செய்வதில்லை?
4. தாய், தந்தை நீ, நான் என அனைவரையும் கடவுள் என்று கூறுகிறார்களே இவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?
5. இயற்கையாகவே எல்லாம் இயங்குகின்றது? என்று கூறுபவர்களிடம் எவ்வாறு தஃவா சொல்வது?
6. கடவுளை ஏன் அவன், இவன் என்று கூறுகிறீர்கள்?
7. கடவுளைப் படைத்தது யார் என்ற அவர்களின் கேள்வியை எப்படி அணுகுவது?
8. அல்லாஹ்வின் அத்தாட்சியை சொன்ன பின்னரும் நம்பாத நாத்திகர்களுக்கு எப்படி விளக்குவது?
9. இறைவன் சர்வ வல்லமை உடையவனாக இருக்கின்றான் என்றால் ஊனம், கூன், குருடுகளை படைத்தது ஏன்?
10. பட்டுபுடவையும், தங்கமும் ஆண்களுக்கு ஏன் தடை?
இஸ்லாம் தொடர்பான கேள்விகள்:
1. அல்லாஹ் இருக்கின்றானா? இறைவன் இருக்கின்றான் என்பதை எவ்வாறு எடுத்து சொல்வது?
2. இறந்தபின் வாழ்வு இருக்கமுடியுமா? மறுமையை எவ்வாறு எடுத்து செல்வது?
3. குர்ஆன் என்பது பல தோழர்கள் எழுதி கொடுத்த ஒரு புத்தகம்தானே?
4. ஷிர்க் கூடாது என்று கூறும் இஸ்லாம் ஏன் ஆதாமுக்கு மலக்குகளையும், ஷைத்தான்களையும் அல்லாஹ் ஸூஜூது செய்ய சொன்னான்?
5. சுவர்க்கத்தில் ஆதாமை பார்த்து இந்த கனியை சாப்பிடாதே என்று கூறிய இறைவன், ஆதாம் சாப்பிடுவார் என்று தெரிந்திருந்தும் ஏன் அந்த மரத்தை வைத்தான்? அதை நீக்கிவிடலாமே?
6. மனிதர்களில் அநேகரை நாம் நரகத்திற்கு என்றே படைத்திருக்கின்றோம் என்று கூறுகின்ற அல்லாஹ் எவ்வாறு அன்புடையோனாக இருக்கமுடியும்?
7. விதியை நம்ப மறுக்கின்றனரே, எவ்வாறு நம்ப வைப்பது?
8. ஷைத்தானைப்பற்றி நாத்திக ரீதியாக விளக்கவும்?
பரிணாம வளர்ச்சி பற்றிய கேள்விகள்:
1. Gene Technology & Fossils வைத்து Evolution Theory நீருபிக்கப்பட்டதாக கூறுகிறார்களே! அதற்கென்ன விளக்கம்?
2. பரிணாம வளர்ச்சி கோட்பாடு பொய் என்பதை எவ்வாறு நிரூபிப்பது?
இவ்வாறு கேள்விகள் அமைந்திருந்தன. மாணவர்கள் தமக்குத் தெரிந்த பதில்களை விடையாக அளித்தனர். பின்னர் அவர் அக்கேள்விகளுக்கான முழு விளக்கத்தையும் அளித்தார்.
சென்ற வகுப்பில் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடையளித்த அப்துர் ரஹ்மான் ஐயா என்பவருக்கு ‘‘தஃவாவின் பன்முகங்கள்” என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்றைய தின சிறப்பு பாடம் நடத்த வருகை தந்திருந்த ‘அந்நஜாத்‘ ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களுக்கு, தஃவா சென்டர் ஆண்கள் பகுதி பொறுப்பாளர் உமர் ‘‘தோழர்கள்” என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார்..
அன்று மதியம் நடைபெற்ற வகுப்பில், ‘நழுவிப்போகும் நஃபிலான நல்லறங்கள்‘ என்ற தலைப்பின் கீழ், மவ்லவீ ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ உரையாற்றினார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த நஃபிலான (உபரியான) வணக்கங்களை விட்டும் நழுவிச் சென்று கொண்டிருக்கும் சமுதாயத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்திடுவது எவ்வாறு என்பது குறித்து அவர் தனதுரையில் விளக்கினார்.
பின்னர், அன்றாடம் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை வாசகங்களை பயிற்றுவித்த சகோதரர் பிலால், அவற்றை மனனம் செய்து ஒப்புவிக்குமாறு மாணவர்களைப் பணித்தார்.
சென்ற முதல் வகுப்பில் மனனம் செய்ய பணிக்கப்பட்ட துஆ - பிரார்த்தனைகளை அனைத்து மாணவர்களும் முழுமையாக மனனம் செய்து முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது, அல்ஹம்துலில்லாஹ்!
அடுத்த (தர்பிய்யா 4ஆம்) வகுப்பு:
இன்ஷாஅல்லாஹ் தொடர் தர்பிய்யாவின் 4ஆம் வகுப்பு (தஃவா பயிற்சி) வருகிற ஜனவரி மாதம் 22ஆம் தேதி நமது தஃவா சென்டரில் வைத்து நடைபெறவுள்ளது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு, சமூக நல்லிணக்க மையம் - தஃவான சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |