காயல்பட்டினம் கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த கோமான் நற்பணி மன்றம் சார்பில், மருத்துவ ஆலோசனை இலவச முகாம், 17.12.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணி முதல், மதியம் 01.30 மணி வரை காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் தமீமுல் அன்ஸாரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் தலைமையுரையாற்றினார். சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் அப்துல் ரசாக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா வாழ்த்துரை வழங்கியதோடு, முகாமைத் துவக்கி வைத்தார்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடனும், அனைவரின் துஆவுடனும் துவக்க நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் துவங்கிய முகாமில், மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர்கள் மற்றும் அவர்களிடம் ஆலோசனை பெற்ற பயனாளிகளின் விபரப்பட்டியல் பின்வருமாறு:-
பொதுநல மருத்துவர் டாக்டர் எம்.ஏ.அபுல்ஹஸன் - 98 பயனாளிகள்,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி - 120 பயனாளிகள்,
மனநல மருத்துவர் டாக்டர் அப்துர்ரஹ்மான் - 27 பயனாளிகள்,
குழந்தைகள் நலம் மற்றும் சுவாச நோய் நிபுணர் டாக்டர் சரவணன் - 137 பயனாளிகள்,
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் சுந்தர்சிங் - 84 பயனாளிகள்,
எலும்பு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அபுல் காஸிம் - 100 பயனாளிகள்,
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபூபக்கர் - 70 பயனாளிகள்,
பல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஹ்மூத் சுலைமான் - 50 பயனாளிகள்,
ஃபிஸியோதெரபிஸ்ட்களான டாக்டர் எஸ்.முருகேசன் - 25 பயனாளிகள்,
டாக்டர் லெட்சுமி ப்ரியா - 28 பயனாளிகள்
சர்க்கரை நோயால், கால் உணர்ச்சி நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைக் கண்டறியும் பயோதிஸியோ கருவி மூலம் 87 பயனாளிகள் பரிசோதனை செய்துகொண்டனர்.
அமீரகம்வாழ் கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த இளைஞர்கள் இம்முகாமுக்கு அனுசரணையளித்திருந்தனர்.
தகவல்:
கோமான் நற்பணி மன்றம் சார்பாக,
ஹாஜி A.லுக்மான்,
நகர்மன்ற உறுப்பினர்,
கோமான் தெரு, காயல்பட்டினம். |