வரும் 01.01.2012 புத்தாண்டு முதல், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
01.01.2012 தேதி முதல் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் கேரி பைகள், ப்ளாஸ்டிக் கோப்பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பையைக் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நகரின் உள்ளூர் தொலைக்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
3. அம்பை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[18 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14829
எய்தவனை விட்டுவிட்டு அம்பை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை! மறுசுழற்சி செய்ய இயலாத ப்ளாஸ்ட்டிக் பொருட்களைப் பயன் படுத்துவோர்க்கு அபராதம் விதிப்பதோடு நிறுத்தி விடாமல்,அதனை விற்பனை செய்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவற்றை முற்றிலுமாக ஒழிக்க இயலும்.
4. Re:ஜன.01 முதல் மறுசுழற்சி செ... posted byN.T.SULAIMAN (YANBU)[18 December 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14844
நிச்சியம் பாராட்டப்பட வேண்டிய செய்தி. அதற்குமுன்னால் விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும். பொதுமக்களும் விதியை கடைபிடிக்க வேண்டும்
5. Re:உஜாலா வாழ்த்துக்கள். posted byOMER ANAS (DOHA QATAR.)[19 December 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14850
அருமையான முடிவு!!! தடை போட்ட நகராட்ச்சிக்கு, உஜாலா வாழ்த்துக்கள்!!!
அட்மின் சார்... அட்மின் சார்... கேக்குறேண்டு தப்பா எடுத்துக்காதீங்க, நம்ம KVAT முத்து ஹாஜரா ராத்தாவின், குறுக்குத் தெரு குப்பைமேட்டை அகற்றி பூங்கா அமைக்கும் பணி எப்படி போகிறது? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்!
7. Re:ஜன.01 முதல் மறுசுழற்சி செ... posted byM.N.Sulaiman (Bangalore)[19 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14871
இன்றைய பொழுதில் மிகவும் வரவேற்கத்தக்கது...! நகராட்சிக்கு வாழ்த்துக்கள். நாமும் அவர்களுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Omer Anas காக்கா அவர்களே,
குப்பைமேட்டை அகற்ற நடவடிக்கை ஆரம்பமானது என்னவோ உண்மை தான்...ஆம் நாம் அனைவரும் அதற்காக வாழ்த்து கூட இங்கே பதிவு செய்தோம்...! ஆனால், உண்மை நிலைப்பாடு, வேலை ஆரம்பித்த சற்று தினங்களிலேயே சில எதிர்புவாதியின் வீணற்ற காரணங்களால் நிறுத்தமாகி விட்டது.
என்ன தான் சாபக்கேடு இப்பகுதி மக்களுக்கு...? நில உரிமையாளர்கள், நகர்மன்றம், இப்பகுதி மக்கள் என அனைவரின் ஒத்துழைப்பு இருந்தும் பணிகள் பாதியில் நிறுதப்படுள்ளது. மீண்டும் மக்களின் 35 ஆண்டு கால நம்பிக்கை "கேள்விகுறி"யாகி உள்ளது. பிஞ்சு உயிரை பறிகொடுத்த துக்கம் கூட இன்னும் மறையவில்லை. மீண்டும் ஓர் ஜீவன் கூட பலியாக நாம் காரணமாகி விட வேண்டாம். தயவுகூர்ந்து எதிர்ப்பதை தவிர்த்து அல்லாஹுக்காகவும், இப்பகுதி மக்களுக்காகவும் ஒத்துழைப்பு நல்கி பணியை மீண்டும் தொடர வேண்டுகிறோம்.
அட்மின் அவர்களே, இக்கருத்து சம்மந்தமில்லாமல் இங்கே பதிவு செய்தேன் என கத்திரி போட்டு விடாதீர்கள். இது எங்கள் ஆதங்களின் வெளிப்பாடு...! தாங்களும் எங்களுக்கு உறுதுணை புரிவீர்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.
8. Re:ஜன.01 முதல் மறுசுழற்சி செ... posted byM.N Seyed Ahmed Buhari (Chennai(Mannady))[19 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14872
அஸ்ஸலாமு அழைக்கும்...
கடந்த காலங்களில் நாம் கடைக்கு பொருள்கள் வாங்க சொல்லும் பொது வீட்டில் இருந்தே பைகள் எடுத்து செல்வர்கள்... நவீன காலங்களில் அது இல்லாமல் பிளாஸ்டிக் பைகளை அது மாறியது....
இப்போது அந்த நிலைமை மாறி வீட்டில் இருந்தே பைகளை எடுத்து சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கமல் அதை தவிர்ப்போம்....
பிளாஸ்டிக் இல்ல காயலை உருவாக்குவோம்....
இனி ஜாஸ்மின் பாரடைஸ் மஞ்ச துணி பைக்கு மவுசு தான்.....
9. திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[19 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14873
15-11-2011 அன்று இதற்க்கான ஆலோசனை
08-12-2011 அன்று இதற்க்கான விழிப்புணர்வு ஊர்வலம்.
01-01-2012 அன்று இதற்க்கு தடை.
அல்ஹம்து லில்லாஹ் நல்ல திட்டமிட்ட செயல். இதற்காக பாடுபட்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள். இந்த திட்டம் ஒரு தடையில் மட்டும் நிற்காமல் இன்னும் எல்லா மக்களுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருக்கவும். அப்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் எப்பவும் ஒரு "துணிப்பை" கைவசம் வைத்து கொள்வார்கள்.
கடைக்காரர் பிளாஸ்டிக் கேரி பேக் ல் சாமான் போட்டு கொடுத்தாலும் வேண்டாம் என்னிடம் "துணிப்பை" உள்ளது என்று சொல்லும் அளவுக்கு வரனும்னா விழிப்புணர்வே முக்கியம். அதற்க்கான திட்டங்களில் நகராட்சி உறுப்பினர்கள் குறிப்பாக பெண் உறுப்பினர்கள் அதிகம் ஆர்வம் எடுக்கவும்.
10. Re:ஜன.01 முதல் மறுசுழற்சி செ... posted byOMER ANAS (DOHA QATAR.)[19 December 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14888
அருமையான மிகவும் தெளிவோடு எடுக்கப்பட்ட முடிவுதான். மக்கள்தான் இந்த நல்ல தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்! நிறைவேற்றியும் காட்ட வேண்டும். ஒன்று படுவோம்!
அப்புறம் நான் அட்மினுக்கு வைத்த வேண்டு கோளை தம்பி M N சுலைமான் விளக்கியமைக்கும், அது இந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லை என்றாலும், நல்ல கருத்து என்று அனுமதித்த அட்மினுக்கும் நன்றி!
இது பற்றி தகவல் வரும் போது பொதுவான மக்கள் தகுந்த பதில் தர காத்திருக்கிறார்கள்!
11. தயாரிப்புக்கும் / விற்பனைக்கும் தடை வேண்டும் : posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[19 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14890
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு காயல்பட்டணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டியதும் , மகிழ்ச்சியான செய்தியுமாகும்.
------------------------------------------------
செயலில் காட்ட வேண்டும் :
மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்று நமது நகராட்சியால் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது - இதை அறிவித்ததோடு நில்லாமல் செயலில் காட்ட வேண்டும்.
மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்தோர் நிச்சயமாக உபயோகிக்க மாட்டார்கள்.
இந்த பிளாஸ்டிக் 'பை ' உபயோகம் ஏறத்தாழ கடந்த 25 வருடங்களாகத்தான் அதிக புழக்கத்தில் இருக்கிறது , அதற்கு முன்பெல்லாம் மறுசுழற்சி செய்யக்கூடிய துணி பையும் , காகித கவர்களும்தான்.
எனவே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீண்டும் உபயோகித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலும், சுகாதாரத்தை பேணி நடப்பதிலும் எந்த நஷ்டமுமில்லை - என்றாலும்கூட 25 வருட பழக்க , வழக்கத்தை உடனே மாற்றிவிட முடியாது சிறிது காலம் எடுக்கும் என்பதே உண்மை.
மக்கள் மனம் வைத்தால், அதன் பாதிப்புக்களை உணர்ந்தால் விரைவாக மாற்றிட முடியும் - அதை மனித நேயமுள்ள மக்கள் மாற்றிக்காட்டுவார்கள்.
-------------------------------------------------
இலாப நோக்கமில்லாமல் :
" பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பையைக் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது " இந்த அறிவுரை ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்றாலும் இன்றைய கால சூழலில் சாத்தியப்படுவது அரிது.
பொருளை வாங்குவதற்காக கடைக்கு சென்றால் துணிப்பையை எடுத்து செல்லலாம் - வேறு வேலையாக வெளியே செல்லும்போது , பொருட்கள் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் துணி 'பை' க்கு எங்கே போவது?.
ஆகையினால் கடைக்காரர்கள் விலை மலிவான துணிப்பைகளை வாங்கி வைத்து 2 ரூபாய், 3 ரூபாய் அல்லது 5 ரூபாய் என்று அளவுக்கு தகுந்த மாதிரி விலை நிர்ணயம் செய்து , இலாப நோக்கமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் - சில நேரங்களில் அவர்களின் வியாபாரத்தைப் பொறுத்து இலவசமாகவும் கொடுக்கலாம்.
கேரி பேக்' உபயோகத்திற்கு முன்பு, எந்த கடையிலும் பொருள் வாங்கும்போது ,ஒன்றிரண்டு என்றில்லாமல் அதிக எண்ணிக்கையில் பொருட்கள் வாங்கினால் அவைகளை பிரவுன் கவரில் போட்டு பின் செய்து தருவார்கள் அல்லது நியூஸ் பேப்பரில் மடித்து சணல் கொண்டு கட்டித் தருவார்கள் - அவைகளுக்காக துணிப் பை கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு கடையிலும் ஒரு , ஒரு பொருளாக வாங்கும்போதுதான் துணிப்பையினுடைய அவசியம் தேவைப்பட்டது.
-----------------------------------------------
தயாரிப்புக்கு / விற்பனைக்கு தடை வேண்டும் :
மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்களையும் , விற்பவர்களையும் முதலில் தடை செய்தால்தான் இந்த திட்டம் நிறை வேறும்.
எப்போது பொருள் கிடைக்கவில்லையோ - அப்போது உபயோகம் தடைபடும் = பொருள் இருந்தால்தானே உபயோகிக்க முடியும்!!!.
ஆகையால் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் உள்ள அத்தனை தயாரிப்பாளர்களையும் , விற்பனையாளர்களையும் விதிக்கு மீறி செயல்பட்டால் அவைகளை அப்புறப்படுத்தி , தண்டனையை கொடுங்கள் மக்களின் உபயோகம் கட்டுப்படும்.
----------------------------------------------
மக்களே!
மனிதன் மனிதனாக , மனித நேயமுள்ளவனாக வாழ வேண்டும் என்றால் - மக்கள் தானாகவே மனித நேயமுள்ளவராக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
நமது சுய அறிவை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை நாமாகவே நிறுத்தி மனித நேயமுள்ள மக்களாக வாழ வழிவகுப்போம்.
12. Re:ஜன.01 முதல் மறுசுழற்சி செ... posted byHusain Noorudeen (Chennai)[20 December 2011] IP: 118.*.*.* India | Comment Reference Number: 14899
ஹையா, அப்படீன்னா இனிமே கல்யாண சப்பாடுகள்ள பழைய தண்ணீ கலையம், கறி சிட்டி எல்லாம் பாக்கலாமுன்னு சொல்லுங்க........... ஆமா, தண்ணீர் பாக்கட்டும் இந்த தடைல வருமுல்லங்க?
13. Re:ஜன.01 முதல் மறுசுழற்சி செ... posted byseyed mohamed (KSA)[20 December 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14904
நண்பர் ஹுசைன் சொன்னதுபோல், இனி கலரி சாப்பாட்டு தண்ணீர், கரி சட்டி இனி பிளாஸ்டிக் உபயோகம் தடை படும். இல்லாவிட்டால் நகராட்சி இன் முற்றிலும் தடை என்பது கேள்வி குறியே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross