செய்தி எண் (ID #) 7731 | | |
சனி, டிசம்பர் 17, 2011 |
குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5669 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (45) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் தலைவரான மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள் இன்று நள்ளிரவு 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த சில காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சில தினங்களுக்கு முன் காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த இவர், மர்ஹூம் ஷெய்கு சுலைமான் அவர்களின் மகனும், முன்னாள் “முத்துச்சுடர்” மாத இதழின் நிறுவனரும், ஆசிரியருமான மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் இளைய சகோதர்ருமாவார். இவரது மனைவி கடந்த ஏழாண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். இவரது மகன் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் குருவித்துறைப்பள்ளியின் இணைச் செயலாளராக சேவையாற்றி வருகிறார். மற்றொரு மகன் எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான் வணிகம் செய்து வருகிறார். இவர்கள் தவிர்த்து, மூன்று பெண் மக்களும் உள்ளனர்.
அரபி மொழியில் பண்டிதரான இவர், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை ஆகிய மார்க்கக் கல்வி நிறுவனங்களின் பைத் பிரிவுகளுக்கு பல அரபி பைத்துகளை இயற்றியளித்துள்ளார். பல்வேறு மர்ழிய்யா - புகழ்மாலைகளையும் இயற்றிள்ளார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 04.30 மணியளவில் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
10.08.2008 அன்று, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை முன்பகுதியில் நடைபெற்ற அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது, கல்லூரியால் உருவாக்கப்பட்ட ‘ஜஹ்ருல் ஜன்னஹ்‘ என்ற நூலை, அதன் தலைவரான - மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ வெளியிட, கடந்த சில தினங்களுக்கு முன் காலமான - கல்லூரியின் துணைத்தலைவர் ஹாஜி பி.மஹ்மூத் அதைப் பெற்றுக்கொள்ளும் காட்சி:-
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆபிதீன்,
காயல்பட்டினம்.
செய்தியில் சில தகவல்களும், படமும் இணைக்கப்பட்டுள்ளன. (17.12.2011 - 15:54hrs) |