Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:54:06 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7732
#KOTW7732
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 17, 2011
மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் உடல் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3684 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் தலைவரான மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள் இன்று நள்ளிரவு 02.00 மணியளவில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 04.30 மணியளவில், அவர்களின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, குருவித்துறைப்பள்ளி உள்பள்ளியில் வைக்கப்பட்டது.

மரணித்தவருக்கான சிறப்பு (ஜனாஸா) தொழுகையை, அவர்களின் சகோதரர் மர்ஹூம் முத்துச்சுடர் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் மகனான மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ நிகழ்த்த, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆ இறைஞ்சினார். பின்னர், மாலை 05.00 மணியளவில் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அதன் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி,

அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி செயலர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், குருவித்துறைப்பள்ளி முத்தவல்லி ஹாஜி எஸ்.எம்.கபீர், அதன் துணைத்தலைவர் ஹாஜி நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம், அதன் இணைச் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், அதன் முன்னாள் இமாம்களான தை.மு.க.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம், ஹாஜி தை.மு.க.சுல்தான் அப்துல் காதிர், அதன் நடப்பு இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி செயலர் ஹாஜி முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை,

மார்க்க அறிஞர்களான, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ, அதன் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் ‘வெள்ளை வேஷ்டி‘ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, நகரின் மூத்த ஆலிம்களுள் ஒருவரான ஹாஜி காழி அலாவுத்தீன் ஆலிம்,

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அதன் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, மவ்லவீ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை ஆசிரியர் மாஸ்டர் முஹம்மத் அலீ, மஸ்ஜித் மீக்காஈல் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன்,

காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஜெஸ்மின் கலீல், கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஜா அரபி, தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (கரூர் ட்ரேடர்ஸ்), ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பி.எம்.ஸர்ஜூன்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், நகர துணைச் செயலாளர் ஏ.எல்.அபூஸாலிஹ்,

நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், தைக்கா சாமு ஷிஹாபுத்தீன், திமுக மூத்த உறுப்பினர் கவிஞர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத்,

ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ், ஹாஜி வாவு சித்தீக், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி ஸதக்கத்துல்லாஹ் என்ற ச.த., ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எம்.என்.எல்.சுலைமான், ஹாஜி கானா ஸாலிஹ், ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி வாவு உவைஸ், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக், உள்ளிட்ட பிரமுகர்களும், திரளான பொதுமக்களும் இந்நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர். மாலை 05.30 மணியளவில் நல்லடக்க நிகழ்வுகள் நிறைவுற்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by Cnash (Makkah ) [17 December 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14753

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆலிம் பெருந்தகை அவர்களுடைய மண்ணறையை பிரகாசமாக்கி தந்தருள்வானாக!! அவர்கள் விட்டு சென்று இருக்கும் குடும்பத்தினருக்கும் சபூரையும் இருலோக பாக்கியங்களையும் தந்தருன்வானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by fathimaahmed (kayalpatnam) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14763

மறைந்த ஆலிம் அவர்களின் கப்ரை பிரகசமஹா ஆக்கிவைப்பனாக அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன். alaainna awliyaallahi lahavfunalaihumvalahumyouhjanoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14766

அஸ்ஸலாமு அலைக்கும், வ றஹ்மத்துல்லாஹி வ பறக்காத்துஹூ.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். அல்லாஹ் மவ்த்தா அவர்களின் பிழைகளை பொறுத்து மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக

63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கிறான்2-156,,,

. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 2:156.
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். ُ 4:78 أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!4-78 20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

பொதுவாக நமதூர் சகோதரர்களுக்கு அறிவிப்பது என்ன வெனில் மவ்த்து உறுதியானபின் உடன் செய்திகளை பொது இடங்களிலோ லவ்ட் ஸ்பீக்கர் மூலமோ அல்லாமலோ அறிக்விக்கும்போது, அறிவிப்பின் கடைசியாக “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ, வற் ஹம் ஹூ” என்று ஆண் மவ்த்தாக்கும்.பெண் மவ்த்தாவாக இருந்தால் ”அல்லாஹும்மங்ஃபிற் லஹா” ”வ ற் ஹம் ஹா “ என்றும் துஆ செய்து முடித்தால் ஒரு மையித்துக்கு நாம் கேட்கும் துஆ வும் சேரும்.. மற்றவர்களை துஆ கேட்க வைத்த ஃதவாபும் நமக்கும் கிடைக்கும். இது ஒரு நீண்ட ஸுன்னத்தான துஆ வின் கடைசி வாசகங்கள் . மவ்த்து உறுதியானபின் மையித்தை பார்த்த உடன் இந்த துஆக் களையாவது ஓத வேண்டும்.

للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة

அம்ர் 100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு இப்னி ஆஸ்(ரலி)- நூல்-புகாரி அறிவித்தார். Volume :1 Book :3

ஆம், ஆம், உண்மையிலும் உண்மையே !!!

”ஆலிமுல் மவ்த் ஆலமுல் மவ்த்”ஒரு ஆலிம் மவ்த் ஆகுவது முழு உலகமுமே மரணிப்பதுக்கு சமம் என பொறுள்பட நாயகம்(ஸல்) கூறினார்கள். முற்றிலும் சரியே!

காறணம் 25 வருடங்களாகவே காயலில் கல்விச் சமுத்திரங்களான சங்கைக்குரிய அல்லாமாக்களான மற்ஹூம்களான மு.க.செய்யிது இப்றாஹீம் ,சா.சாஹுல் ஹமீத், மி.அபுல்ஹஸன், எஸ்.எம்.ஐதுறூஸ் சாஹிபு தம்பி போன்ற ஆலிம்கள் மறைந்தனர். இதை ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அடுத்த மக்களிடமும் கூறுங்கள்.

தைக்கா றஹ்மத்துலாஹ்.
ஃபோன் 280852
காயல்பட்டனம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by kadershamuna (shenzhen - china) [18 December 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 14777

மறைந்த ஆலிம் அவர்களின் கப்ரை பிரகசமஹா ஆக்கிவைப்பனாக அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by Thaika Ubaidullah (Macao) [18 December 2011]
IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 14778

Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon. We send out heartfellt condlolences to the breaved family of our great Aalim. May Allah bless him with Jannathul Firdous.

It was very sad that two of our very elders passing away in few days time from our street. We have grown seeing them every day in our young life. Our thoughts and prayers are with all the members of the family in Kayalpatam, Hong Kong, Africa and in other parts.

Please observe saboor and may Allah bless us All. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by S.A.Muhammad Ali (Dubai) [18 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14785

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிஊன். மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் பெருந்தகையின் நல்அமல்களை எல்லாம் வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக. அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயரிய பதவியை வழங்க நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. ஆமீன்.

டியர் அட்மின்,

கல்யாணத்துக்கு தான் அடாப்பு போடுவாங்க. இங்கேயுமா? அப்புறம் என் பெயரை ஏன் போட இல்லை என்று கேட்க போறாங்க. இதை தவிர்த்து இருக்கலாம். தவறாக இருந்தால் இந்த கருத்தை நீக்கி விடவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மனமார்ந்த நன்றி!
posted by Sheik Abdullah (Kayalpatnam) [19 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14879

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினரான எங்களன்பு சொந்தங்களே!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.

தன் வாழ்நாளெல்லாம் இறைவனுக்காக வாழ்ந்து, நம் யாவரின் நெஞ்சங்களிலும் நீங்காவிடம் பெற்று, இன்று நம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட பெருமதிப்பிற்குரிய பெருமகனாரும், நமது அன்பிற்கு என்றும் சொந்தக்காரருமான

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ

அவர்களின் மறைவையொட்டி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரங்கல் தெரிவித்தும், இனிய துஆக்களை இறைஞ்சியும் கருத்து தெரிவித்துள்ள தங்கள் யாவருக்கும், மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாராகிய நாங்கள் எமதன்பான நன்றியை அகங்குளிர தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ்வின் மேலான கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் எனும் பொறுமையை மேற்கொண்டோம். தாங்களனைவரும் ஸபூரைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உங்களில் யாருக்கும் சொல்லலோ - செயலாலோ, அறிந்தோ - அறியாமலோ மர்ஹூம் அவர்களால் ஏதேனும் தங்கடம் ஏற்பட்டிருந்தால் அவற்றையெல்லாம் பொருந்திக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

அத்துடன், கொடுக்கல் - வாங்கலில் தங்களில் யாருக்கேனும் மர்ஹூம் அவர்கள் நிலுவை செய்திருந்தால், எங்களை உரிமையுடன் அணுகுமாறு அன்புடன் வேண்டி நிறைவு செய்கிறோம்...

வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

என்றும் அன்புடன்,
S.A.முஹம்மது இஸ்மாயில் (மகன்),
S.A.ஷெய்கு சுலைமான் (மகன்)

S.A.முத்து ஹலீமா பீவி (மகள்)
S.A.ஃபாத்திமா பீவி (மகள்)
S.A.ஆஷிகத்து துர்ரிய்யா (மகள்)

S.S.ஷாஹுல் ஹமீது (மருமகன்)
K.S.கிழுறு முஹம்மது (மருமகன்)
A.S.L.சுலைமான் லெப்பை (மருமகன்)

M.J.ஃபாத்திமா பீவி (மருமகள்)
K.S.மின்ஹத்துல் பாரீ (மருமகள்)

மற்றும் உற்றார் - உறவினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ்...
posted by Mahmood Sulthan (Chennai) [19 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14896

Assalamu Alaikum. Inna Lillahi wa inna ilaihi raajioon. May Allah ll forgive all his sins and give jannathul firdhous-ul-a'laa Aameen. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவில் சிறு சாரல்!  (19/12/2011) [Views - 2638; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved