செய்தி எண் (ID #) 7716 | | |
வியாழன், டிசம்பர் 15, 2011 |
துளிர் நிறுவனர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமதுக்கு விருது! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4429 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய |
|
சென்னை புதுக்கல்லூரியில் டிசம்பர் 10 மற்றும் 11 - ஆகிய இரு தேதிகளில் புது டில்லியில் அமைந்துள்ள INSTITUE OF OBJECTIVE STUDIES (IOS) தொண்டு நிறுவனத்தின் சார்பாக - அதன் வெள்ளி விழா கொண்டாடத்தையொட்டி சமகாலத்திய உலகில் இளைஞர்களின் முன் உள்ள சவால்கள் என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு புதுகல்லூரியின் தலைவர் ஜனாப் ஏ. முஹம்மது அஷ்ரப் தலைமை தாங்கினார். IOS நிறுவனத்தின் தலைவர் டாக்டர் முஹம்மது மன்சூர் ஆலம் முன்னிலை வகித்தார். இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் 5 ஆய்வு அமர்வுகள் நடைபெற்றது. பேராசிரியர்கள், முனைவர்கள், அறிவுஜீவிகள் பலரும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து பேசினார்கள்.
இந்த சர்வதேசே மாநாட்டில் காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் நிறுவனர், வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமதுக்கு - மாற்றுத்திறன் மிக்க சிறார்களுக்கான சிறந்த சேவை புரிந்தமைக்கு விருதும், பாராட்டு பத்திரமும் வழங்கி, கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை - மாநாட்டின் பிரதம விருந்தினர் - சவுதி அரேபியாவை சார்ந்த டாக்டர் இப்ராஹீம் பின் ஹமத் அல்-கொய்த வழங்கினார். IOS நிறுவனத்தின் தலைவர் டாக்டர் முஹம்மது மன்சூர் ஆலம் - வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமதின் சேவைகளை பாராட்டி பேசினார்.
இந்த சர்வதேச மாநாட்டில் மலேசியா நாட்டைச் சார்ந்த டாக்டர் டத்தோ முஹம்மது இக்பால், கவிக்கோ அப்துர் ரஹ்மான், டாக்டர் கிறிஸ்து தாஸ் காந்தி IAS, டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மது, Tayseer Consultants நிறுவனத்தின் இயக்குனர் இப்னு சவுத், கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் சுமைய்யா, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
விருது பெற்ற வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமத் தனது ஏற்புரையில் பேசும் போது -
இறைவனின் நற்கூலியை மறுமையில் பெறுவது ஒன்றையே மறுபயனாக கருதி தான் 1998 ஆம் வருடம் முதல் மாற்றுத்திறனாளிகள், இயலாநிலைக் குழந்தைகள், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருவதாகவும், இது போன்ற விருதுகள் தன் சேவைக்கு மேலும் உந்து சக்தியாக இருந்து ஊக்கமளிக்கும் என்றும், இந்த விருதினை தன்னுடன் துளிரில் இணைந்து பணியாற்றும் அணைத்து அறங்காவலர்கள், சிறப்பாசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கிடைத்த விருதாக கருதுவதாகவும், சமூக சேவையில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். |