எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ், அப்பள்ளியின் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு விருந்து வழங்கி உபசரித்தார்.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் அண்மையில் பணி ஓய்வுபெற்றார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 07.12.2011 அன்று மாலை 04.30 மணிக்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக தனது பணி ஓய்வை முன்னிட்டு, 04.12.2011 அன்று மதியம், பள்ளியின் விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு அவர் விருந்து வழங்கினார். காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறப்பட்டது.
இவ்விருந்தில், பள்ளியின் விளையாட்டுத்துறை இந்நாள் - முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விருந்தின் நிறைவில், மாணவர்கள் பலர் ஆசிரியர் ஜெபராஜுக்கு சால்வை அணிவித்து, குழுப்படம் எடுத்து, நினைவுப் பரிசுகளையும் வழங்கி தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
விருந்து ஏற்பாடுகளை, எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான - ஐக்கிய விளையாட்டு சங்க மேடைக்குழுவினர் செய்திருந்தனர்.
|