எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.மஹ்மூத் இன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவரது உடல் இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று காலை வழமை போல பள்ளி திறக்கப்பட்டது. காலை 09.15 மணியளவில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் பள்ளியின் முன்னாள் தாளாளரான ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் மறைவுச் செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, அவரது மறுமை நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கப்பட்டது. ஒன்றுகூடல் நிறைவுற்றதும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினார்.
பின்னர், பள்ளியின் சார்பில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமியற்றப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
தகவல்:
அஹ்மத் மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |