எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.மஹ்மூத் இன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவரது உடல் இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிறந்த கல்விச் சேவையாளரும், பொது நல ஊழியரும், பொது வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், எமது அமைப்பின் மூத்த உறுப்பினரான ஹாஜி எம்.புகாரீ அவர்களின் தந்தையுமான ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் கவலையுற்றோம்.
வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப்பிழைகளைப் பொறுத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக ஈந்தருள்வானாக என்றும்,
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக என்றும் நாங்கள் நெஞ்சாரப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங். |