எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.மஹ்மூத் 13.12.2011 அன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவரது உடல் அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலர் ஹாஜி யஹ்யா முஹ்யித்தீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வருந்துகிறோம்...
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவரும், எங்கள் அமீரக காயல் நல மன்றத்தின் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.எ.புஹாரி அவர்களின் பெரிய தந்தையுமான, ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றோம்.
நமதூரின் கல்வி மேம்பாட்டிற்கு வித்திட்டவர்களில் இப்பெரியாரும் ஒருவர். காயல் மாநகர் இன்று தன் மூத்த மகனை இழந்திருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக்கொள்வானாக... அவர்களின் பிழைகளை மன்னிப்பானாக... ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சொர்க்கப்பதியில் அவர்களை வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உங்களுக்கு அழகிய பொறுமையை தருவானாக, ஆமீன்.
இவ்வாறு அமீரக காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி யஹ்யா முஹ்யித்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |