மாணவர்களுக்கு தரமான கல்வி உரிய முறையில் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டுதோறும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் ஆண்டாய்வு (inspection) நடத்தப்படும்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 08.12.2011 அன்று ஆண்டாய்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் துறை சார்ந்த இதர அலுவலர்கள் ஆண்டாய்வுக்காக வருகை தந்தனர். அவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை சால்வை அளித்து வரவேற்றார். பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி முன்னிலை வகித்தார்.
அன்று காலையில், வகுப்புகள் வாரியாக சென்ற அதிகாரிகள் அங்குள்ள மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்ந்தறிந்தனர். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ,முஹம்மத் ஹனீஃபா, கல்வி அலுவலர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர், அலுவலகத்திலுள்ள பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாலையில், கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனர். பின்னர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, மாணவாகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆண்டாய்வு நிகழ்வை முன்னிட்டு, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல் மற்றும் படங்கள்:
அஹ்மத் A.J. முஸ்தஃபா,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |