துல்ஹஜ் (1432) மாத அமாவாசை அக்டோபர் 26 புதன்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 7:55 மணி
அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் அக்டோபர் 27 அதிகாலை 1:25.
அன்று (அக்டோபர் 26) காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:57 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:28.
அன்று வெறுங்கண்கள்
கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காண இயலாது.
பசிபிக் கடல் பகுதியில் தொலைநோக்கிகள் உதவிகொண்டும் பிறையை காணலாம்.
அக்டோபர் 27 அன்று மாலை 5:57 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:24. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 17 மணி நேரம். அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காண இயலாது.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தெற்கு ஆப்ரிக்கா கண்டத்திலும் வெறுங்கண்கொண்டும், வட அமெரிக்காவின்
அனேக பகுதிகளிலும், அரேபிய பகுதிகளிலும், தென் இந்தியாவின் அனேக பகுதிகளிலும் தொலைநோக்கிகள்
உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
அக்டோபர் 28 அன்று - காயல்பட்டினம் உட்பட - உலகின் பிற பகுதிகளில் பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு அக்டோபர் 27 - துல்ஹஜ் 1 ஆகும். அவர்களுக்கு
நவம்பர் 5 - ஹஜ் பெருநாள் ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு அக்டோபர் 26
(அமாவாசை) அன்று
துல்கைதா 28 பூர்த்தி ஆகிறது. அக்டோபர் 27 அன்று மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தெற்கு ஆப்ரிக்கா
கண்டத்திலும் வெறுங்கண்கொண்டு பிறையை காண வாய்ப்புள்ளது. அப்பகுதிகளில் அன்று பிறை காணப்பட்ட தகவல்
வந்தால் அவர்களுக்கு அக்டோபர் 28 அன்று துல்ஹஜ் 1 ஆகும். அவர்களுக்கு நவம்பர் 6 - ஹஜ் பெருநாள் ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு அக்டோபர் 26 (அமாவாசை)
அன்று துல்கைதா 28 பூர்த்தி ஆகிறது. அக்டோபர் 26 / அக்டோபர் 27 அன்று காயல்பட்டணத்தில் பிறையை
வெறுங்கண்கள் கொண்டு காண இயலாது.
அக்டோபர் 28 அன்று துல்கைதா 30 யை பூர்த்தி செய்வர். அக்டோபர் 28 அன்று காயல்பட்டணத்தில் பிறையை
வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
அக்டோபர் 29 அன்று (அக்டோபர் 28 பின்னேரம்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தை துவக்குவர். அவர்களுக்கு நவம்பர் 7 -
ஹஜ் பெருநாள் ஆகும்.
தகவல்:
www.kayalsky.com
[மூன்று மாத தகவல்கள் (துல்கைதா, துல்ஹஜ், முஹர்ரம்) - வெளியிடப்படாமல் இருந்தது. அவை கால தாமதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தாமதத்திற்கு வருந்துகிறோம்] |