முஹர்ரம் (1433) மாத அமாவாசை நவம்பர் 25 வெள்ளிக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 6:09 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் 11:39.
அன்று (நவம்பர் 25) மாலை 5:55 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:04. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 6.5 மணி
நேரம். அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காண இயலாது.
பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவிலும், வட அமெரிக்காவிலும் தொலைநோக்கிகள் உதவிகொண்டும் பிறையை
காணலாம்.
நவம்பர் 26 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:55 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:06. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 30.5 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
உலகின் அனேக பகுதிகளில் வெறுங்கண்கொண்டு பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு நவம்பர் 26 - முஹர்ரம் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு நவம்பர் 25 (அமாவாசை) அன்று
துல்ஹஜ் 29 பூர்த்தி ஆகிறது. நவம்பர் 25 அன்று பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவிலும், வட அமெரிக்காவிலும்
தொலைநோக்கிகள் உதவிகொண்டும் பிறையை காணலாம். அப்பகுதிகளில் அன்று பிறை காணப்பட்ட தகவல் வந்தால் அவர்களுக்கு நவம்பர் 26
அன்று முஹர்ரம் 1 ஆகும். தகவல் கிடைக்காதபட்சத்தில் நவம்பர் 27 அன்று முஹர்ரம் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு நவம்பர் 25 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 28 பூர்த்தி
ஆகிறது. நவம்பர் 26 காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம். ஆகவே அவர்கள் நவம்பர் 26 அன்று துல்ஹாஜ் 29
பூர்த்தி செய்து, நவம்பர் 27 அன்று முஹர்ரம் மாதத்தை துவக்குவர்.
தகவல்:
www.kayalsky.com
[மூன்று மாத தகவல்கள் (துல்கைதா, துல்ஹஜ், முஹர்ரம்) - வெளியிடப்படாமல் இருந்தது. அவை கால தாமதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தாமதத்திற்கு வருந்துகிறோம்]
|