காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் 32ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, 23.11.2011 அன்று நடைபெற்றது.
ஹாஜ்ஜா யு.ஆயிஷா ரஃபீக்கா விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, ஆத்தூர் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை டி.ஆமினாள் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.
2010-2011 கல்வியாண்டிற்கான கல்விப் பரிசுகள் மற்றும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் இவ்விழாவின்போது வழங்கப்பட்டன.
கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நான்கு பாடங்களில் சாதனை புரிந்த மாணவி எஸ்.எம்.ஆயிஷா ஷரஃபிய்யாவிற்கு பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற இரு மாணவியருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. சாதனை மாணவியருக்கு மொத்த கல்விப் பரிசாக முப்பத்து ஏழாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சாதனை மாணவியரை ஊக்கப்படுத்தும் பொருட்டு இப்பணப்பரிசுகளை, ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் தாமாக முன்வந்து வழங்கினார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியர் குழுமம் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாணவியரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
தகவல்:
தாஜ் ப்ரவ்ஸிங் சென்டர்,
பிரதான வீதி, காயல்பட்டினம்.
செய்தியில் சில விபரங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டது. (28.11.2011 - 22:30hrs) |