தூத்துக்குடி - கொழும்பு இடையே இயக்கப்பட்டு வந்த பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியானது. பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான மென்பொருளில் ஏற்பட்ட பழுதே இச்சேவை நிறுத்தத்திற்கான காரணமென கப்பல் போக்குவரத்தை இயக்கும் நிறுவனத்திலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதில் காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்காட்டியா ப்ரின்ஸ் என்ற இக்கப்பலுக்காக இலங்கையிலுள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான நிலுவைத் தொகையை இதுவரை கப்பல் நிறுவனம் செலுத்தவில்லை என்றும், நிலுவைத் தொகையை பெற்றுத் தருமாறும், கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திடம் அந்த எரிபொருள் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இலங்கையிலிருந்து வெளியாகும் ‘வீரகேசரி‘ என்ற தமிழ் நாளிதழின் இன்றைய வெளியீட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கையடுத்து, ஸ்காட்டிய ப்ரின்ஸ் கப்பலை தடுத்து வைக்குமாறு துறைமுக அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணையை டிசம்பர் 07ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வீரகேசரி‘ நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு:-
தகவல்:
O.L.M.ஆரிஃப்,
கொள்ளுப்பிட்டிய,
கொழும்பு, இலங்கை. |